இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஆண்ட்ராய்டு போன் இல்லாத மனிதர்களை காண்பது என்பதே அரிதாகி விட்டது. 24 மணி நேரமும் சமூக வலைதளங்களின் பயன்பாடு என்பதும் தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. அதிலும் சினிமா அரசியல் கிரிக்கெட் சார்ந்த விஷயங்கள் தினசரி நிகழ்வுகள் சமூக வலைதளங்களில் மூலமாக வைரலாகி விடுகின்றன.
சமூக ஊடகங்கள் வாயிலாக நொடிப் பொழுதில் எல்லாவிதமான நிகழ்வுகளும் எங்கு இருந்தாலும் மக்கள் பார்வைக்கு அவர்களது கையில் உள்ள மொபைல் போன் திரைகளின் வழியாக உடனே வந்து விடுகின்றன. அதனால் தான் உலகம் உங்கள் கையில் உள்ளது என்று பலரும் அதிசயமாக கூறுகின்றனர். ஆனால் அதுதான் உண்மையாக உள்ளது.
அந்த வகையில் எல்லாருமே சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். பேஸ்புக் வாட்ஸ் அப் இன்ஸ்டாகிராம் எக்ஸ் பக்கம் என வலைதள பக்கங்களில் தங்களை பற்றிய பதிவுகளை செய்கின்றனர். குறிப்பாக சினிமா நடிகர்கள் தங்களது கருத்துகள் எண்ணங்களை பதிவிடுவதோடு தங்களது படங்கள் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்டுகளையும் அதில் செய்கின்றனர்.
அதன் அடிப்படையில் தமிழ் சினிமாவில் உள்ள ஹீரோக்களுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ள பாலோயர்ஸ் எண்ணிக்கை குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. இதில் முதல் 5 இடங்களில் அதிகளவில் பாலோயர்ஸ் இருப்பது யார் என்பதும் இந்த லிஸ்ட்டில் உறுதியாகி உள்ளது.
அதன்படி இன்றைய நிலவரத்தின் படி இன்ஸ்டாகிராமில் 9 மில்லியன் பாலோயர்ஸ் கொண்ட நடிகர் தனுஷ் 5வது இடத்திலும், அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் 9.1 மில்லியன் பாலோயர்ஸ் பெற்று 4வது இடத்திலும் உள்ளார். அடுத்து 9.9 மில்லியன் பாலோயர்ஸ் உள்ள நடிகர் சூர்யா 3ம் இடத்தில் இருக்கிறார்.
தொடர்ந்து 14.7 மில்லியன் பாலோயர்ஸ் உள்ள நடிகர் சிம்பு 2ம் இடத்திலும் உள்ளார். இந்த வரிசையில் தமிழ் சினிமா ஹீரோக்களில் இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்ஸ் வைத்து முதலிடம் வென்றவர் நடிகர் விஜய்தான். அவருக்கு 15.8 மில்லியன் பாலோயர்ஸ் உள்ளனர். இது தளபதி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்த லிஸ்ட்டில் நடிகர் அஜீத்குமார் இல்லை. ஏனென்றால் அவர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துவது இல்லை.





