தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நட்சத்திரமாக மட்டுமின்றி முக்கிய மனிதராகவும் வலம் வந்தவர் விஜயகாந்த். ஆரம்பத்தில் புரட்சிக்கலைஞர் என்றும் பிறகு கேப்டன் என்றும் அழைக்கப்பட்டவர். கேப்டன் என்ற பெயரே அவருக்கு நிரந்தரமானதாக நிலைத்து விட்டது. சினிமாவில் அரசியலில் விஜயகாந்த பிடித்த இடத்தை வேறு யாராலும் பிடிக்க முடியாது என்பதே உண்மை.
நடிகர் விஜயகாந்திடம் இருந்த நேர்மையும் எளிமையும் துணிச்சலும்தான் அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவை வரவேற்பை பெற்றுத் தந்தது என்றால் அது மிகையல்ல. எதை செய்தாலும் அதில் அவர் யதார்த்தமாக நடந்துக்கொண்டார். தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக கேப்டன் இருந்த போது சங்கத்தின் தீர்க்க முடியாத கடனை தீர்த்து வைத்தது குறிப்பிடத்தக்கது.
தேமுதிக என்ற அரசியல் இயக்கத்தை துவங்கிய விஜயகாந்த் அரசியலில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்க இருந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக அவர் நோய்களால் பாதிக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்து விட்டார். எனினும் அவர் பல நிகழ்ச்சிகளில் பொதுக்கூட்டங்களில் பேசிய வீடியோக்கள் தொடர்ந்து இணையத்தில் வந்துக்கொண்டே இருக்கின்றன.
ஒருமுறை தேமுதிக பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகர் விஜயகாந்த் கூறியதாவது, எனக்கு பழைய சோறும் வெங்காயமும் இருந்தால் போதும். சாப்பிட்டுட்டு படுத்துடுவேன். அதுவே போதும். இதை என் மனைவியிடம் கூட கேட்டுப் பாருங்க. பெருமைக்காக உங்க முன்னால் இதை நான் சொல்லவில்லை. பழைய சோறும் வெங்காயமும் சாப்பிடுவது எனக்கு பிடிக்கும்.
என் மகன் விஜய பிரபாகரனும் அப்படிதான் சாப்பிடுவான். சண்முக பாண்டியன் எதை கொடுத்தாலும் சாப்பிடுவான். அப்பா அம்மா ரெண்டு பேருக்கும் தப்பாம என் பிள்ளைகள் பொறந்திருக்காங்க. ரெண்டு சிங்கங்களை நான் பெத்திருக்கிறேன். அப்பா அம்மா பேச்சு என்றால் அப்படி கேட்பார்கள். எப்பவும் மீறி நடக்க மாட்டார்கள்.
அப்பாவுக்கு கோபம் வரும் கோபம் வரும் அடிப்பார் என்று சொல்லி என் பிள்ளைகளை வளர்ப்பார்கள். ஆனால் நான் அடிக்க மாட்டேன். சும்மா சொல்வார்கள். இப்படி எதையாவது சொல்லி பிள்ளைகளை நல்ல முறையில் வளர்ப்பார்கள். ஆனால் எனக்கு ஒன்றென்றால் என் மகன்கள் ரெண்டு பேரும் குமுறிப்போய் எழுந்து நிற்பார்கள் என்று விஜயகாந்த் அந்த கூட்டத்தில் பேசிய வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.





