- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென கடும் சர்ச்சையில் சிக்கிய நடிகர் சியான் விக்ரம் - அட இதெல்லாம் உங்களுக்கு தேவையா...

திடீரென கடும் சர்ச்சையில் சிக்கிய நடிகர் சியான் விக்ரம் – அட இதெல்லாம் உங்களுக்கு தேவையா ப்ரோ என்று விமர்சிக்கும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சியான் விக்ரம். தனது சொந்தமான செல்லப் பிராணியாக அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை மனித குரங்கு லார் கிப்பன் குட்டியை அவர் வளர்த்து வருகிறார். அந்த குரங்கு குட்டியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகர் விக்ரம் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்டார்.

அந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அரிய வகை குரங்கை வீட்டில் வளர்ப்பதற்கான அனுமதி சான்று விக்ரம் வைத்துள்ளாரா என்று வனத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கிவிட்டனர். அந்த ஆவணங்களின் அடிப்படையில் அந்த குரங்கு குட்டியை முதலில் மணிப்பூரை சேர்ந்த லைகுராம் சிங் என்பவர் வைத்திருந்தாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

லைகுராம் சிங் 8 லார் கிப்பன் குரங்கு குட்டிகளை வளர்ப்பதற்கான அனுமதி சான்று வைத்திருந்ததாகவும் அவற்றின் பூர்வீக நாடு மலேசியா எனவும் ஆவணங்களில் உள்ளது. லைகுராம் சிங் தன்னிடம் இருந்த 8 குரங்குகளில் 3 குரங்கு குட்டிகளை ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த கேசவநாதன் என்பவருக்கு வழங்கியுள்ளார்.

அவற்றில் ஒரு குரங்குதான் தற்போது நடிகர் சியான் விக்ரம் வீட்டில் பராமரிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. அந்த சர்ச்சைக்குரிய வீடியோவை நடிகர் விக்ரம் நீக்கிவிட்டாலும் அந்த சர்ச்சை இன்னும் முடிவடையவில்லை. லார் கிப்பன் என்கிற அரிய வகை குரங்கு வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட பிராணி ஆகும்.

- Advertisement -

இத்தகைய விலங்குகளை வீட்டில் வளர்ப்பது, கூண்டில் அடைப்பது போன்றவை மிகவும் தவறான செயல். லார் கிப்பன் குரங்குகள் மரங்களில் வாழும் விலங்குகள். அவை சுதந்திரமாக வாழ பெரிய மரங்கள் தேவைப்படுகின்றன. அத்தகைய விலங்குகளை வீட்டில் கூட்டில் அடைத்து வைப்பது அதன் சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்று இயற்கை ஆர்வலர்கள் நடிகர் விக்ரமுக்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற அரிய வகை விலங்கினங்கள் இன்னும் யார் யாரிடம் உள்ளது? இந்த விலங்கு பரிமாற்றத்தில் தொடர்புடைய நபர்கள் யார்? அரிய வகை வனவிலங்குகளை கடத்தும் கும்பல் அல்லது இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்யும் கும்பலுக்கு இதில் தொடர்பு உள்ளதா என்று வனத்துறை அதிகாரிகளின் தீவிர விசாரணை இப்போது நடந்து வருகிறது. இதெல்லாம் உங்களுக்கு தேவையா ப்ரோ? என்று ரசிகர்கள் விக்ரமுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்