தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகர் விக்னேஷ். சின்னத்தாயி என்ற படத்தில் அறிமுகமான நடிகர் விக்னேஷ் தொடர்ந்து கிழக்கு சீமையிலே செல்லக்கண்ணு பொங்கலோ பொங்கல் சுயம்வரம் சூரி என பல படங்களில் நடித்திருக்கிறார்.
ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக நடிகர் விக்னேஷ் படங்களில் நடிக்கவில்லை. ஒரு இளம் நாயகனாக ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகர் விக்னேஷ், ஹீரோவுக்கான எல்லா அம்சங்களுடன் நடிப்பாற்றல் மிக்கவராக இருந்தும் அவரால் முன்னணி நடிகராக ஜெயிக்க முடியாமல் போய்விட்டது.
இதற்கிடையே பாலு மகேந்திரா இயக்கத்தில் பிரசாந்த் ஹீரோவாக நடித்த வண்ண வண்ண பூக்கள் படத்தில் முதலில் ஹீரோவாக நடித்தவர் விக்னேஷ்தான். 5 நாட்கள் அவர் நடித்த நிலையில் பிறகு அவரை மாற்றிவிட்டு நடிகர் பிரசாந்தை ஹீரோவாக்கி நடிக்க வைத்துள்ளனர். அந்த நேரத்தில் மனம் உடைந்து போன நடிகர் விக்னேஷை தேற்றி ஆறுதல் சொன்னவர் அன்றைய உதவி இயக்குனர் பாலா என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசிய நடிகர் விக்னேஷ் கூறியதாவது, என்னுடைய முதல் படம் சின்னத்தாயி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தில் 17 வயதிலேயே நான் ஹீரோவாகி விட்டேன். அதனால் அந்த வெற்றியை எனக்கு தக்க வெச்சுக்க தெரியலே.
அதுக்கு அப்புறம் எப்படி இயக்குனர்களை தேர்வு செய்வது, நடிக்கிற கம்பெனிகளை தேர்வு பண்றது? நம்மை எப்படி இம்ப்ரூவ் பண்ணிக்கிறது நம்மை எப்படி மார்க்கெட்டுல கொண்டு வர்றது அப்படீன்னு எதுவுமே எனக்கு தெரியலே. என்னுடைய வயதும் அப்படி. அப்போது சொல்லிக்கொடுக்க எனக்கு யாரும் ஆளும் இல்லே.
அப்போ ஜாலியாக இருந்தேன். அப்படியே இருந்துடுவோம் என்று நினைச்சுட்டேன். அதுதான் என்னுடைய வெற்றியை தக்க வெச்சுக்க முடியாமல் போய்விட்டது என்று அந்த நேர்காணலில் நடிகர் விக்னேஷ் வெளிப்படையாக கூறியிருக்கிறார். சின்னத்தாயி படம் இப்போதும் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு கிளாசிக் படமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜா இசையில் அந்த படத்தில் வரும் நான் ஏரிக்கரை மேல் இருந்து எட்டு திசை பார்த்திருந்தும் என்ற பாடல் இப்போதும் டிரண்டிங்கில் இருக்கிறது.





