- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதிமுக ஆட்சி தொடரணும் என்றால் இது சரியாக இருக்கணும் - எம்ஜிஆர் சொன்ன ரகசியத்தை பகிரங்கப்படுத்திய...

அதிமுக ஆட்சி தொடரணும் என்றால் இது சரியாக இருக்கணும் – எம்ஜிஆர் சொன்ன ரகசியத்தை பகிரங்கப்படுத்திய சபாநாயகர் ஜேடிசி பிரபாகர்!

- Advertisement -

இன்றைய தமிழக வெற்றிக் கழகம் அமைச்சரவையில் சட்டசபை சபாநாயகராக பதவி வகிப்பவர் ஜேசிடி பிரபாகர். ஆரம்பத்தில் அவர் அதிமுகவில் இருந்தவர். எம்ஜிஆரின் அமைச்சரவையில் முக்கிய அங்கம் வகித்தவர். குறிப்பாக அன்றைய முதல்வர் எம்ஜிஆரின் மிக நெருக்கமான நம்பிக்கையான நபர்களில் ஒருவராக இருந்தவர்.

அன்றைய காலகட்டத்தில் ஒருமுறை, எனக்கு மகள் இருந்தால் அவரை ஜேடிசி பிரபாகருக்கு தான் திருமணம் செய்து வைத்திருப்பேன் என்று எம்ஜிஆர் வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். அந்தளவுக்கு எம்ஜிஆரே தனது மருமகனாக ஏற்றுக்கொள்கிற அளவுக்கு எம்ஜிஆரின் அன்புக்கு உரியவராக ஜேடிசி பிரபாகர் இருந்திருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் நேற்று நடந்த தமிழக சட்டசபை கூட்டத்தில் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் குறித்து பேசியதாவது, ஒரு சுவையான என் மனதில் நினைத்துக்கொண்டிருக்கும் ஒரு செய்தியை இங்கே சொல்ல விரும்புகிறேன். கடந்த 1984ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ம் தேதி நான் அன்றைய முதல்வர் புரட்சித் தலைவர் எம்ஜிஆருடன் அவரது காரில் பயணித்துக்கொண்டு இருக்கிறேன். அப்போது மேற்கு கே கே நகர் பக்கம் கார் போகிறது.

ஒரு இடத்தில் கூட்டமாக நிறைய பேர் நின்றுகொண்டு இருந்தார்கள். என்ன என்று கேட்ட போது இது வில்லிவாக்கம் தொகுதிதான் ரேசன்கடை என்று நான் சொன்னேன். உடனே காரை நிறுத்துங்க என்று சொன்ன எம்ஜிஆர் காரை விட்டு இறங்கி அந்த ரேசன் கடைக்கு சென்றார். நானும் உடன் சென்றேன். அங்கிருந்த ஒரு சின்ன ஸ்டூலில் அவரே அமர்ந்துக்கொண்டார்.

- Advertisement -

அங்கிருந்த அரிசியை கொண்டு வரச் சொல்லி கையில் வாங்கி பார்த்தார். அங்கு வரிசையில் இருந்த மக்களிடம் கடையில் எல்லா பொருட்களும் சரியாக கிடைக்கிறதா, எடை சரியாக உள்ளதா, சரியான நேரத்துக்கு கடை திறக்கிறார்களா என்றெல்லாம் விசாரித்தார். அங்கிருந்த எடை கற்களை பொருட்களை எல்லாம் எடுத்து கவனமாக பார்த்தார். எதற்கு பார்த்தார் என்று உங்களுக்கே தெரியும்.

ரேசன் கடையில் எல்லாம் சரியாக கிடைக்கிறது என்று அங்கிருந்த மக்கள் எல்லாம் சொன்னார்கள். அவர்களிடம் சிரித்தபடியே பேசிக்கொண்டு காருக்கு அருகில் வந்த எம்ஜிஆர் என் கையை பிடித்துக்கொண்டு சொன்னார். இது ஒழுங்காக இருக்கிற வரைக்கும் நாம் திரும்ப திரும்ப ஆட்சிக்கு வருவோம் என்று உறுதியாக சொன்னார் என்று சபாநாயகர் ஜேடிசி பிரபாகர் கூறினார்.

- Advertisement -

சற்று முன்