- Advertisement -
Homeபொழுதுபோக்குநானும் ஒரு இரண்டு பேருக்கு கை கொடுத்தேன்... ஆனால் அவர்கள் என்னை காலை வாரி விட்டார்கள்......

நானும் ஒரு இரண்டு பேருக்கு கை கொடுத்தேன்… ஆனால் அவர்கள் என்னை காலை வாரி விட்டார்கள்… மனம் நொந்து பேசிய நடிகர் விமல்… அந்த இரண்டு பேர் யாரா இருக்கும்…

- Advertisement -

சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் கதாநாயகனாக உயர்ந்தவர் விமல். கில்லி உட்பட பல்வேறு திரைப்படங்களில் அவர் சிறு வேடத்தில் வந்து போவார். இந்த நிலையில் பசங்க திரைப்படம் தான் அவருக்கு பெரிய அளவில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தது.

 

- Advertisement -

சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அந்த திரைப்படத்தில் மீனாட்சி சுந்தரம் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் விமல். ஏழாம் வகுப்பு சிறுவர்களையே பிரதானப்படுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தாலும், விமலுக்கென தனி காதல் சீன்களும் இருந்தன.

 

- Advertisement -

இந்த திரைப்படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த விமல், களவாணி படத்தில் கதாநாயகனாகினார். சற்குணம் இயக்கிய இந்த திரைப்படம் காமெடி கலந்த காதல் திரைப்படமாக எடுக்கப்பட்டது. குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் மிகவும் கலகலப்பாக எடுக்கப்பட்டதால், களவாணி திரைப்படம் வெற்றிவாகை சூடியது.

 

இதன் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் போய் சேர்ந்தார் விமல். அங்கிருந்து மீண்டும், சற்குணம் இயக்கத்தில் வாகை சூடவா திரைப்படத்தின் நடித்திருந்தார். கல்வியை பிரதானப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த படங்களுக்குப் பிறகு விமலுக்கு சொல்லிக் கொள்ளும் படியாக எந்த படங்களும் அமையவே இல்லை.

 

தேசிங்கு ராஜா, கலகலப்பு என ஒன்று இரண்டு திரைப்படங்கள் மட்டுமே விமலிற்கு வெற்றியை கொடுத்தன. அண்மையில் அவர் நடிப்பில் வெளியான போகும் இடம் வெகு தூரம் இல்லை திரைப்படம் விமர்சன ரீதியாக பேசப்பட்டது. இந்த நிலையில் தற்போது அவர் போஸ் வெங்கட் இயக்கத்தில் சார் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். வெற்றிமாறன் இதனை தயாரித்துள்ளார்.

 

இதன் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய விமல், கூத்துப்பட்டறையில் இருந்தபோது என்னை கை பிடித்து தூக்கி விட்டவர் விஜய் சேதுபதி தான். பசங்க படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்ததும் அவர்தான். அப்போது அவர் கூட ஹீரோவாகவில்லை. ஆனால் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். நானும் இரண்டு பேருக்கு வாய்ப்பு கொடுத்தேன் ஆனால் அவர்கள் காலை வாரி விட்டார்கள். அதனால், யாருக்கு உதவ வேண்டும் என்பதையே தெரிந்து பார்த்து தான் செய்ய வேண்டும் என்று பேசியுள்ளார்.

 

- Advertisement -

சற்று முன்