- Advertisement -
Homeபொழுதுபோக்குஎஸ்டிஆர் 50 படத்தில் நடிகர் சிம்பு இப்படி ஒரு கேரக்டரில் நடிக்கிறாரா? - சீனியர் கமல்...

எஸ்டிஆர் 50 படத்தில் நடிகர் சிம்பு இப்படி ஒரு கேரக்டரில் நடிக்கிறாரா? – சீனியர் கமல் இந்த விஷயத்துல டிப்ஸ் அள்ளி கொடுத்திருப்பாரே…

- Advertisement -

நடிகர் சிலம்பரன் இப்போது தக்லைஃப் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற ஜூன் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது. முதன் முறையாக இந்த படத்தில் கமல் சிம்பு இணைந்து நடித்திருக்கின்றனர். நாயகன் படத்துக்கு பிறகு 37 ஆண்டுகள் கழித்து மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்திருக்கிறார். நாயகன் படம் போல இதிலும் சிறந்த நடிகர் தேசிய விருது கமலுக்கு கிடைக்குமா, என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தக்லைஃப் படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் எஸ்டிஆர் 49 இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ்டிஆர் 50 டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் எஸ்டிஆர் 51 என 3 படங்களில் நடிக்கிறார். இந்த படங்களுக்கான ப்ரீ புரடக்சன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

நடிகர் சிம்புவை பொருத்த வரை எந்த கேரக்டர் என்றாலும் அதில் தனது நேர்த்தியான அதே நேரத்தில் அழுத்தமான நடிப்பை தருபவர் என்பது கவனிக்கத்தக்கது. கடந்த பல மாதங்களாக அவர் நீண்ட தலைமுடியுடன் காணப்படும் நிலையில், தக்லைஃப் படம் ஷூட்டிங் முடிந்து பல மாதங்களாகியும் அதே கெட்டப்பில் இருக்கிறார்.

இந்நிலையில் சிம்பு தனது அட்மன் சினி ஆர்ட்ஸ் சார்பில் சொந்தமாக தயாரிக்கும் எஸ்டிஆர் 50 படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தேசிங்கு பெரியசாமி இயக்கும் இந்த படத்தில் சிம்பு 2 வேடங்களில் நடிக்கிறார். இதில் ஒரு கேரக்டர் நெகட்டிவ் ரோல் என்றும் மற்றொன்று திருநங்கை கேரக்டர் என்றும் தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே பிரகாஷ் ராஜ் ஒரு படத்தில் திருநங்கையாக நடித்திருக்கிறார். அவ்வை சண்முகி படத்தில் கமல் சண்முகி மாமியாக நடித்திருந்தார். பணக்காரன் படத்தில் ரஜினிகாந்த் ஒரு பாடல் காட்சியில் பெண் வேடமிட்டு வருவார். மாமன் மகள் படத்திலும் சத்யராஜ் பெண் வேடமிட்டு நடித்திருப்பார். அதே போல் வடிவேலு விவேக் போன்றவர்களும் சில படங்களில் பெண் வேடமிட்டு நடித்திருக்கின்றனர்.

அந்த வரிசையில் இப்போது நடிகர் சிம்பு திருநங்கை கேரக்டரில் நடிக்க உள்ளார். அதற்காக தான் அவர் நீண்ட தலைமுடியுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தக்லைஃப் படத்தில் சிம்பு நடித்த போது, இந்த கேரக்டரில் நடிப்பது குறித்து கமலிடம் இருந்து நிறைய டிப்ஸ் கிடைத்திருக்க வாய்ப்புள்ளது. வித்யாசமான கேரக்டரில் நடிக்க ஆசைப்பட்டு இந்த வேடத்தில் நடிக்க சம்மதித்தேன் என்று நடிகர் சிம்பு கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்