- Advertisement -
Homeபொழுதுபோக்குஊர்ல நிலநடுக்கம் வந்த மாதிரி, என்னோட கை நடுக்கம் பரபரப்பா ஆயிடுச்சு - மதகஜ ராஜா...

ஊர்ல நிலநடுக்கம் வந்த மாதிரி, என்னோட கை நடுக்கம் பரபரப்பா ஆயிடுச்சு – மதகஜ ராஜா விழாவில் ஜாலியாக பேசிய நடிகர் விஷால்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் இருக்கிறார். ஆரம்பத்தில் நிறைய ஹிட் படங்களை கொடுத்தவர் விஷால். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் எதுவும் பெரிய வெற்றியை பெறவில்லை.

ஆனால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் அதற்கு பிறகு ஹரி இயக்கத்தில் வெளியான ரத்னம் படமும் தோல்வியடைந்தது. இந்நிலையில் 12 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட மதகஜ ராஜா படம் தற்போது பொங்கலுக்கு ரிலீசாகி உள்ளது. படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கியுள்ளார்.

- Advertisement -

இந்த படத்தில் விஷால் சந்தானம் வரலட்சுமி சரத்குமார் மற்றும் அஞ்சலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கடந்த 12 ஆண்டுகளாக திரைக்கு வெளிவராமல் முடங்கி கிடந்த இந்த படம் இன்று வெளியாகி உள்ளது. கடந்த வாரத்தில் நடிகர் விஷால் மதகஜ ராஜா பட விழாவில் பங்கேற்றார்.

அப்போது மேடையில் அவருக்கு கைகள் பயங்கரமாக நடுங்கியது. மைக்கை பிடிக்க முடியாமல் அவர் தடுமாறினார். மேலும் விஷால் மிகவும் பலவீனமாக காணப்பட்டார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. விஷாலுக்கு என்னாச்சு என்று ரசிகர்கள் பலரும் வருத்தப்பட்டனர். விஷாலுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு வீட்டில் அவர் ஓய்வில் இருந்து வருவதாக கூறப்பட்டது.

- Advertisement -

நேற்று மதகஜராஜா படத்தின் சிறப்பு காட்சியைக் காண நடிகர் விஷால் வந்திருந்தார். அப்போது அவர் சற்று ஆரோக்கியமாக காணப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் விஷால் பேசியதாவது, என்னோட அப்பாவோட தன்னம்பிக்கை தான் என்னோட பலம். எந்த தடை வந்தாலும் என்னோட இந்த பலத்தால் நான் தாண்டி வருவேன். இதற்கு ஏன் நான் பதில் சொல்ல வரேன்னா, நிறைய பேர் இவர் 3 மாசம் ஷூட்டிங் வரமாட்டார், 6 மாசம் ஷூட்டிங் வர மாட்டார் அப்படீன்னு சொன்னாங்க. ஆனா இப்போ என் கையில் எந்த நடுக்கமும் இல்லை. மைக் இப்போ கரெக்டா தான் இருக்கு.

உங்களுடைய அன்புக்கு ரொம்பவும் நன்றி. நான் சத்தியமா சாகற வரைக்கும் இந்த அன்பை மறக்க மாட்டேன். என்னோட கை நடுக்கம், நிலநடுக்கம் வந்த மாதிரி ஊர் முழுக்க பரபரப்பை ஏற்படுத்திடுச்சு. ஆனா இதன்மூலமா மக்கள், ரசிகர்கள் என் மீது எவ்வளவு அன்பு பாசம் வைத்துள்ளார்கள் என்பதை நான் தெரிந்துக் கொண்டேன் என்று அந்த நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்