தமிழ் சினிமாவில் நடிகர் விஷால் நல்ல ஆக்ஷன் ஹீரோவாக பெயர் பெற்றவர். திமிரு, சண்டக்கோழி, சிவப்பதிகாரம், மலைக்கோட்டை, அவன் இவன் என பல படங்களில் விஷால் நடிப்பு வேற லெவலில் இருக்கும். சமீபத்தில் வந்த மார்க் ஆண்டனி படமும் பெரிய ஹிட் தந்தது.
நடிகர் விஷால், நயன்தாராவுக்கு அடுத்தபடியாக அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்பவர். மார்க் ஆண்டனி சக்சஸ் மீட்டில், 2 கோடி, 3 கோடி ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு யாரும் படம் எடுக்க வரவேண்டாம் என சொல்லி, விமர்சனத்தில் சிக்கினார். அதுவும் தென்னிந்திய நடிகர் சங்க செயலாளராக இருந்துக்கொண்டு, விஷால் இப்படி பேசலாமா, என பலரும் விமர்சித்தனர்.
தொடர்ந்து, நியூயார்க்கில் இளம்பெண் ஒருவருடன் ரோட்டில் நடந்து செல்லும் விஷால், கேமராவை பார்த்ததும் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு, அந்த பெண்ணை இழுத்துக்கொண்டு ஓடுவது போன்ற வீடியோ வைரலானது. ஆனால், இது வேண்டுமென்றே பிராங்க் செய்ய எடுத்தது என விஷால் விளக்கமளித்தார்.
அத்துடன் கேப்டன் விஜயகாந்த் மறைந்த போது நடிகர் சங்கம் தரப்பில் இருந்து அவருக்கான மரியாதையை செய்ய தவறிவிட்டனர். அதுவும் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர், நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் என்ற முறையில், நடிகர் சங்கம் தரப்பில் உரிய மரியாதை செய்யவில்லை. வெளிநாட்டில் இருந்துக்கொண்டு விஷால் வரவில்லை என்ற விமர்சனத்திலும் சிக்கினார்.
இப்போது மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டு சர்ச்சையில் விஷால் சிக்கி இருக்கிறார். அதாவது ஒரு டாஸ்மாக் கடையில், மதுபானம் வாங்க பலரும் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். அப்போது அங்கு வரும் விஷால் ஒருவரை பார்த்து, என்ன பண்றே என்க, டாஸ்மாக் கடையில இருக்கிறேன், என்கிறார். ஏகப்பட்ட போதையில் இருக்கறே, இது டாஸ்மாக் கடை இல்லே, ரத்னம் படத்துக்கு போட்ட செட்யா என அங்கிருப்பவர்களை துரத்துகிறார்.
https://www.instagram.com/reel/C2KaqKIMqup/?utm_source=ig_embed&utm_campaign=loading
இது ரத்னம் படத்துக்காக எடுக்கப்பட்ட காட்சியா, அல்லது ரத்னம் படத்தை பிரமோ செய்ய திட்டமிட்டு எடுக்கப்பட்ட காட்சியா என்று சர்ச்சை இப்போது வைரலாகி வருகிறது. இப்படி செட்டிங் செய்து படத்தை விளம்பரப்படுத்தலாமா, உண்மையான ஹீரோ என்றால் இப்படி உண்மையில் செய்ய வேண்டும் என பலரும் விஷாலை கலாய்த்து வருகின்றனர்.





