- Advertisement -
Homeபொழுதுபோக்குஇது யாருமே எதிர்பார்க்காத புது டிவிஸ்ட்டா இருக்குதே…. தளபதி விஜயுடன் மோத தயாரான புரட்சித் தளபதி...

இது யாருமே எதிர்பார்க்காத புது டிவிஸ்ட்டா இருக்குதே…. தளபதி விஜயுடன் மோத தயாரான புரட்சித் தளபதி விஷால் – இது வேற லெவல் சம்பவம்பா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் துவக்கத்தில் இளைய தளபதி விஜய் என அழைக்கப்பட்டார். பிறகு அவர் தளபதி விஜய் என்றுதான் கடந்த பல ஆண்டுகளாக அழைக்கப்படுகிறார். தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் டாப் 1 இடத்தை பிடித்தவர் நடிகர் விஜய், வசூல் சக்கரவர்த்தியான விஜய்தான் சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் விவகாரம் கிளம்பியது பழைய கதை.

எனினும் இப்போதும் அவர்தான் டாப் லெவலில் இருந்து வருகிறார். ஏனெனில் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியின் தலைவராக முழுநேர அரசியலில் ஈடுபட போகிறார் நடிகர் விஜய். அதற்கான ஆயத்தப் பணிகளில் கடந்த பல மாதங்களாக தீவிரம் காட்டி வருகிறார்.

- Advertisement -

நடிகர் விஜயை பொருத்த வரை, சினிமாவில் சகல தரப்பு ரசிகர்களையும் தன் நடிப்பால் வசியப்படுத்தி இருக்கிறார். கடந்த 2 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கி, மக்கள் மத்தியில் பெரிய செல்வாக்கையும் பெற்றுவிட்டார். ஏனெனில் ரஜினி, கமல் கூட இத்தகைய ஒரு தரமான செயலை இதுவரை செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜயை போலவே, நடிகர் விஷாலுக்கும் நிறைய அரசியல் ஆர்வம் இருந்து வருகிறது. ஏற்கனவே ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்து, மனுவில் சரியான விவரங்களை அவர் தாக்கல் செய்யாததால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. எனினும் அரசியலில் அவரது ஆர்வம் குறையவில்லை.

- Advertisement -

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, விஜயை போலவே சைக்கிளில் ஓட்டுச் சாவடிக்கு வந்து தனது ஓட்டை பதிவு செய்தார் விஷால். கேட்டதற்கு என்னிடம் கார் இல்லாததால், சைக்கிளில் வந்தேன் என்று மிகப்பெரிய பொய் சொன்னார். வாடகை கார், ஆட்டோ பிடித்து வரக்கூட முடியாத அளவுக்கு விஷால் வறுமையில் இருக்கிறாரா என நெட்டிசன்கள் அவரை கலாய்த்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அரசியலில் மோதுகிறாரோ இல்லையோ, விஜயுடன் மோத விஷால் தயாராகி விட்டார். கடந்த 2012ம் ஆண்டில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான படம் மதகஜ ராஜா. வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம் உள்ளிட்டோர் நடித்த இந்த படம், தி கோட் படம் ரிலீஸாகிற அதே செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்