- Advertisement -
Homeபொழுதுபோக்குதுப்பறிவாளன் 2 படமும் எடுக்க முடியலே… ரத்னம் படமும் சொதப்பி விட்டது - கடைசியில் அதிரடி...

துப்பறிவாளன் 2 படமும் எடுக்க முடியலே… ரத்னம் படமும் சொதப்பி விட்டது – கடைசியில் அதிரடி முடிவெடுத்த நடிகர் விஷால் – ஆனா நீங்க அதுக்கு சரிப்பட்டு வருவீங்களா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நல்ல வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகர் விஷால். குறிப்பாக சண்டக்கோழி, திமிரு, அவன் இவன், துப்பறிவாளன், தாமிரபரணி, பூஜை போன்ற படங்களில் விஷால் நடிப்பு வேற லெவலில் இருந்தது. அதே நேரத்தில் கமர்ஷியல் என்ற பெயரில் படுமோசமான படங்களிலும் விஷால் நடித்திருந்தார் என்பதும் கவனிக்கத்தக்கது.

அதிரடி சண்டைக்காட்சிகளில் விஷால் சிறப்பாக நடிக்கிறார், ரசிகர்கள் ரசிக்கின்றனர் என்பதற்காக சண்டை காட்சிகளை மட்டுமே மையப்படுத்திய படங்களில் விஷால் நடித்ததால், ஒரு கட்டத்தில் ரசிகர்கள் சண்டை காட்சிகளாக அவர் நடித்த படங்களை பார்த்து நொந்து போய்விட்டனர். கமர்ஷியல் படங்களாக இருந்தாலும் ரசிக்கும் படங்களாக அவைகள் இருக்கவில்லை.

விஷால் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளியான மருது படத்துக்கு பிறகு, மற்ற படங்கள் எதுவுமே சரியாக போகவில்லை. பல படங்கள் பிளாப் ஆன நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த மார்க் ஆண்டனி படம் பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் இதில் நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா நடிப்புதான் பிரதானமாக இருந்தது.

இந்த படத்தை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த ரத்னம் படமும் பெரிய பிளாப் படமாக அமைந்தது. விஷாலுக்கு, பிரியா பவானி ஷங்கர் ஜோடியாக நடித்திருந்த இந்த படம் பெரிய ஏமாற்றத்தை தந்தது. பல வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குனர் ஹரிக்கும் இந்த படம் மிக மோசமான தோல்வியை கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி விஷாலுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த துப்பறிவாளன் படத்தின் 2ம் பாகத்தை தானே இயக்கி, நடிப்பதாக விஷால் அறிவித்தார். அதற்காக லண்டனுக்கு லொகேஷன் பார்க்கச் சென்று திரும்பி வந்தார். ஆனால், விஷாலை நம்பி பெரிய அளவில் முதலீடு செய்ய தயாரிப்பாளர்கள் யாருமே முன்வரவில்லை. இதனால் துப்பறிவாளன் 2 படத்தை இயக்க முடியாமல், விஷால் அந்த திட்டத்தையும் கைவிட்டு விட்டார்.

இப்போது தமிழில் நடிக்க வாய்ப்பே இல்லாத நிலையில், தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடிக்கும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் விஷால் கமிட் ஆகியிருக்கிறார். இதற்காக மிகப்பெரிய அளவில் விஷாலுக்கு சம்பளம் பேசப்பட்டுள்ளது. விஷாலின் பூர்வீகமே ஆந்திரா தான். தமிழில் அவர் நடித்த பல படங்கள் தெலுங்கில் வெளியாகி உள்ளன. அதனால் தெலுங்கிலும் அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. எனவே, தெலுங்கில் வில்லனாக நடித்து வெற்றிகை சூடுவார் என்று நம்பலாம். ஆனால் அங்கேயும் சொதப்பி, இதுக்கு அவர் சரிப்பட்டு வர மாட்டார் என்ற பெயரை வாங்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சற்று முன்