- Advertisement -
Homeபொழுதுபோக்குதக்லைஃப் படம் சரியாக போகாததற்கு அதுதான் காரணம்… அந்த விஷயத்தை சுட்டிக்காட்டி பேசிய நடிகர் மன்சூர்...

தக்லைஃப் படம் சரியாக போகாததற்கு அதுதான் காரணம்… அந்த விஷயத்தை சுட்டிக்காட்டி பேசிய நடிகர் மன்சூர் அலிகான்!

- Advertisement -

கடந்த 5ம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் தக்லைஃப் படம் வெளியானது. கமல்ஹாசன் சிம்பு திரிஷா அபிராமி அசோக் செல்வன் நாசர் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனே தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தார்.

வழக்கமான கேங்கஸ்டர் கதையாக இது இருந்த போதிலும் படத்தின் திரைக்கதையில் சுவாரசியம் விறுவிறுப்பு எதுவுமே இல்லாமல் சோம்பலான ஒரு திரை ஓட்டத்தில் இந்த படத்தை மணிரத்னம் டைரக்ட் செய்திருந்ததாக விமர்சனம் எழுந்தது. அதிலும் குறிப்பாக திரிஷாவின் கேரக்டர் குறித்து சர்ச்சை எழுந்தது.

- Advertisement -

கமல் சிம்பு இருவருக்குமே திரிஷாவை ஜோடியாக காட்டியிருந்தது ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதுவும் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை போன்ற ஒரு கம்பீரமான கேரக்டரில் நடித்த திரிஷாவை, இப்படி ஒரு இழிவான கேரக்டரில் காட்டி அவரது இமேஜை மணிரத்னம் டேமேஜ் செய்துவிட்டார் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ஆடுகளம் படத்தில் நடிகர் அல்வா வாசு, சேவல் சண்டை நடக்கும் இடத்தில் பேசும் மைக் காட்சி புகைப்படத்தை பதிவிட்டு, களம் 8ல் தக்லைஃப் படத்தை போட்டு பொளந்து கொண்டிருக்கின்றனர் என்று மீம்ஸ் போட்டு கலாய்க்கும் அளவுக்கு தக்லைஃப் படம் மிக மோசமான மொக்கை படமாக இருந்து விட்டது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் ஒரு வீடியோ வெளியிட்டு அதில் தக்லைஃப் படம் குறித்து பேசியிருக்கிறார். அதில் மன்சூர் அலிகான் கூறியிருப்பாவது, ஏஆர் ரகுமான் இறை தன்மை மிக்கவர். அவர்களது பாடல்களில் எப்போதுமே ஒரு இறை தன்மை நிறைந்திருக்கும். அதை நான் பலமுறை கவனித்திருக்கிறேன். எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே என்று அவர் பாடியதும் இறையின் அருள்தான்.

தக்லைஃப் படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடல் மிகவும் அற்புதமான பாடல். காலை கனவினில் காதல் கொண்டேன் என அந்த பாடலில் வரும் வரிகள் மிகவும் அற்புதமானவை. முத்தமழை பாடல், தக்லைஃப் படத்தில் இடம்பெற்று இருந்தால் தக்லைஃப் படம் நிச்சயமாக பெரிய வெற்றியை பெற்றிருக்கும். அந்த பாடல் இடம்பெறாதது தான் தக்லைஃப் படத்தின் தோல்வி காரணம் என்று அந்த வீடியோவில் நடிகர் மன்சூர் அலிகான் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்