- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஷால் திருமணம் செய்துக்கொள்ளப் போவது ரஜினிக்கு மகளாக நடித்த அந்த நடிகையை தானா? போடு...

நடிகர் விஷால் திருமணம் செய்துக்கொள்ளப் போவது ரஜினிக்கு மகளாக நடித்த அந்த நடிகையை தானா? போடு வெடிய… உற்சாகத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார். 47 வயதான நிலையில் இன்னும் அவர் திருமணம் செய்துக்கொள்ளவில்லை. தென்னந்திய நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டிய பிறகு தான் எனது திருமணம் என்று 9 ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்திருந்தார் நடிகர் விஷால்.

ஆனால் 3 ஆண்டுகளில் சங்கத்தின் கட்டட கட்டுமான பணிகள் முடிவடையும் என்று அவர் எதிர்பார்த்திருந்த நிலையில் பல காரணங்களால் தாமதம் ஏற்பட்டு 9 ஆண்டுகளாக கட்டட கட்டுமான பணிகள் நீடித்த நிலையில், வருகிற ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் திறப்பு விழா நடைபெற உள்ளது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பேசிய நடிகர் விஷால், என்னுடைய திருமணம் முடிவாகிவிட்டது. இன்னும் 4 மாதங்களில் எனக்கு திருமணம் நடக்கும். நான் கடந்த ஒரு மாதமாக ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன். எங்கள் திருமணம் ஆகஸ்ட் 29ம் தேதி எனது பிறந்த நாளில் கூட நடைபெற வாய்ப்புள்ளது என்றும் அதிரடியாக அறிவித்தார்.

விஷாலுக்கு 47 வயதான நிலையில் அவரது திருமணம் எப்போது என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்த அவரது ரசிகர்களுக்கு இந்த தகவல் தேனாக இனித்தது. ஆனால் திருமணம் செய்து கொள்ள போகும் பெண் குறித்து எந்த தகவலையும் நடிகர் விஷால் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால் இப்போது நடிகர் விஷால் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அவர் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான நடிகை சாய் தன்ஷிகா தான். தஞ்சாவூர் சேர்ந்தவர் சாய் தன்ஷிகா. இயக்குனர் ஜெகநாதன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்த பேராண்மை படத்தில் 5 நாயகிகளில் ஒருவராக தமிழ் சினிமாவில் சாய் தன்ஷிகா அறிமுகமானார். தொடர்ந்து பரதேசி அரவான் உள்ளிட்ட படங்களில் சாய் தன்ஷிகா நடித்திருந்தார். குறிப்பாக இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் ரஜினியின் மகளாக யோகி என்ற கேரக்டரில் அவர் நடித்திருந்தார்.

தெலுங்கிலும் ஓரிரு படங்களில் சாய் தன்ஷிகா நடித்திருக்கிறார். இப்போது விஷாலுக்கும் சாய் தன்ஷிகாவுக்கும் இடையே காதல் ஏற்பட்ட நிலையில் திருமணம் வரை முடிவாகி விட்டதாக கூறப்படுகிறது. இன்று மாலை சென்னையில் நடக்கும் யோகிடா பட விழாவில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இந்த விழாவில் விஷால் சாய் தன்ஷிகா திருமணம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

சற்று முன்