- Advertisement -
Homeபொழுதுபோக்குபோலீஸிடம் வசமாக மாட்டிக் கொண்ட உதயநிதி ஸ்டாலின் - பல நாள் ரகசியத்தை போட்டுடைத்த நடிகர்...

போலீஸிடம் வசமாக மாட்டிக் கொண்ட உதயநிதி ஸ்டாலின் – பல நாள் ரகசியத்தை போட்டுடைத்த நடிகர் விஷால்!

- Advertisement -

தமிழகத்தில் 2026ம் சட்டசபை தேர்தலில் முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்த வாரிசாக முதல்வராக போகிறவர் உதயநிதி ஸ்டாலின்தான் என்று திமுகவினர் எப்போதோ பேச துவங்கி விட்டனர். முதுமை காரணமாக ஸ்டாலின் இனி தனது மகன் உதயநிதியிடம் ஆட்சி பொறுப்பை கட்சிப் பொறுப்பை ஒப்படைத்து விடுவார் என்றும் திமுகவினர் கூறி வருகின்றனர்.

திமுகவில் இளைஞரணி பொறுப்பில் இருந்து பிறகு எம்எல்ஏ ஆகி பிறகு விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் இப்போது துணை முதல்வராக வலம் வந்துக்கொண்டு இருக்கிறார். அடுத்த தேர்தலை பொருத்த வரை உதயநிதி ஸ்டாலினுக்கும் விஜய்க்கும்தான் கடுமையான போட்டி இருக்கும் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

அரசியலுக்கு வருவதற்கு முன் சினிமா தயாரிப்பாளராகவும் சினிமா நடிகராகவும் பல படங்களில் நடித்தவர் உதயநிதி ஸ்டாலின். விஷால் போன்ற அவர் வயது ஒத்த நடிகர்களுடன் நெருக்கமான நட்பில் இருந்தவர் உதயநிதி ஸ்டாலின் என்பதும் குறிப்பிடத்தக்கது. அரசியலில் அவர் முழு கவனம் செலுத்தினாலும் அவரது ரெட் ஜெயின்ட் மூவிஸ் தொடர்ந்து படங்களை தயாரித்து வருகிறது.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் விஷால் மேடையில் பேசியதாவது, உதயநிதியை எல்லோரும் எளிமையானவர் என்று சொல்வார்கள். நான் அதை ஒருமுறை நேரில் பார்த்திருக்கிறேன். நானும் உதயநிதியும் ஒண்ணா இருந்திருக்கோம். ஒருமுறை பைக்கில் ட்ரிபிள்ஸ் போனோம்.

- Advertisement -

நான் உதயநிதி வெங்கட் என 3 பேரும் ஒரே பைக்கில் போகிறோம். கோபாலபுரத்தில் எங்கள் பைக்கை போலீசார் நிறுத்திட்டாங்க. ட்ரிப்பிள்ஸ் போயிருக்கீங்க நிறுத்துங்க என்று ஒரு கான்ஸ்டபிள் பைக்கை நிறுத்தி விட்டார். நாங்க பின்னால இருந்து அப்பா பேரை சொல்லு தாத்தா பேரை சொல்லு என்று பலமுறை சொன்னோம்.

ஆனால் பைக்கில் இருந்து இறங்கிய உதயநிதி, தன்னுடைய பெயர் உதய் என்று மட்டும் சொல்லிவிட்டு 3 பேர் பைக்கில் வந்தததற்காக பைன் கட்டினார் என்று அந்த விழாவில் நடிகர் விஷால் பேசியிருக்கிறார். இந்த விழாவில் நடிகர் உதயநிதி ஸ்டாலினும் கலந்துக்கொண்டு விஷால் பேசுவதை ரசித்து பார்த்துக்கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்