- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி திரைப்படம் நான் செய்ததில் மிகப்பெரிய தவறு... இப்படி கூறினாரா அமீர்கான்... உண்மை நிலவரம் என்ன...

கூலி திரைப்படம் நான் செய்ததில் மிகப்பெரிய தவறு… இப்படி கூறினாரா அமீர்கான்… உண்மை நிலவரம் என்ன…

- Advertisement -

கடந்த மாதம் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது கூலி திரைப்படம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆறாவது திரைப்படமாக இது வெளியானது. அவர் இயக்கத்தில் ரஜினிகாந்த் இந்த திரைப்படத்தில் நடித்திருந்ததால் மிகப் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்த நிலையில், அதனை அது திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை.

பலரும் கூலி திரைப்படம் குறித்து பேசியது ஏமாற்றம் என்ற ஒரே ஒரு வார்த்தைதான். ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிச்சயம் இந்த திரைப்படம் வசூல் ஈட்டும், அந்த சாத்தியம் லோகேஷ் கனகராஜுக்கு மட்டுமே இருக்கிறது என்று பலரும் கூறி வந்த சூழலில் அனைத்தையும் இயக்குனர் பொய்யாக்கி விட்டார் என்றே பலரும் விமர்சனம் செய்தனர். பலரும் எதிர்பார்த்து இருந்த வேளையில் அவர் திரைக்கதையில் விறுவிறுப்பை கூட்டவில்லை என்பதே பேச்சாக எழுந்தது.

- Advertisement -

எந்த ஒரு இடத்திலும் இயக்குனர் லாஜிக் பார்க்கவில்லை, அந்த இடத்தில் அந்த சீன் ஏன் வந்தது என்றே தெரியவில்லை என்பதுதான் பாதி பேர் கூறிவந்தனர். ரஜினிகாந்த் தனது வேலையை சரியாக செய்து முடிக்க, அவருக்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு வில்லனாக வந்த நாகர்ஜுனாவின் கதாபாத்திரம் எழுதப்படவில்லை என்று பலரும் கூறினார்கள்.

அதுவும் கிளைமாக்ஸில் வந்த அமீர்கான் கதாபாத்திரமும் அந்த அளவு தாக்கத்தை கொடுக்கவில்லை. விக்ரம் திரைப்படத்தின் கடைசி காட்சியில் சூர்யா கதாபாத்திரம் வரும். வெறும் பத்து நிமிடங்கள் வந்தாலுமே அதில் ரோலக்ஸ் கதாபாத்திரம் மிக அழுத்தமாகவும், வசனங்கள் கூர்மையாகவும் எழுதப்பட்டிருக்கும். ஆனால் கூலி திரைப்படத்தில் அமீர்கான் ரோல் அப்படி இல்லை என்று பலரும் கூறினார்கள்.

- Advertisement -

வெறும் புகை பிடிக்கும் காட்சிக்கு மட்டும் அவர் வந்து சென்று இருப்பதாகவும் பலர் கிண்டல் செய்தனர். இப்படியான சூழலில் கூலி திரைப்படத்தில் தான் நடித்தது மிகப்பெரிய தவறு என அமீர்கான் பேசி இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. செய்தித்தாள் நிறுவனம் ஒன்றிற்கு அவர் பேட்டி கொடுத்திருப்பது போன்ற ஆர்டிகல் வெளியானது. இதைப் பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அதேசமயம் அந்த செய்தியில் உண்மை இல்லை என்றும், சிலரால் அந்த செய்தி சித்தரிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க அமீர் கானை வைத்து லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட் ஒன்றை எடுக்க தயாராகி வந்தார். ஆனால் தற்போது அந்த திட்டம் நிறுத்தப்பட்டு இருப்பதாக திரைத்துறை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

சற்று முன்