- Advertisement -
Homeபொழுதுபோக்குஉங்க வேலையை ஒழுங்கா செய்யுங்க… அவர் தொடர்ந்து நடிப்பார் - ரெட் கார்டு கொடுத்த தயாரிப்பாளர்...

உங்க வேலையை ஒழுங்கா செய்யுங்க… அவர் தொடர்ந்து நடிப்பார் – ரெட் கார்டு கொடுத்த தயாரிப்பாளர் சங்கத்தை எச்சரித்த நடிகர் விஷால்

- Advertisement -

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர். இவர் தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருக்கிறார். இவர் படங்களையும் தயாரிக்கிறார் என்பதால், ஒரு தயாரிப்பாளராகவும் தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். கடந்த 2017 – 19ம் ஆண்டுகளில் விஷால், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருந்தார்.

அப்போது சங்கத்தின் நிதியை தவறான பயன்படுத்தியதால் சங்கத்துக்கு ரூ. 12 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அந்த தொகையை விஷால் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் விஷால் அதற்கு பதில் அளிக்கவில்லை. அதுகுறித்து கண்டுகொள்ளவும் இல்லை.

- Advertisement -

அதனால் ஏற்கனவே செயற்குழுவில் எடுத்த முடிவின்படி, நடிகர் விஷாலை வைத்து படம் எடுப்பவர்கள், தயாரிப்பாளர் சங்கத்தை கலந்து ஆலோசித்துவிட்டு பிறகு பணிகளை துவங்க வேண்டும். அதாவது விஷாலுக்கு ரெட் கார்டு போட்டிருப்பதாக, இதன்மூலம் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்திருப்பது தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் தனக்கு ரெட் கார்டு போடப்பட்டிருப்பதற்கு, நடிகர் விஷால் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பதிலடி கொடுத்திருக்கிறார். அதுவும் இப்போது வைரலாகி வருகிறது. அதில் நடிகர் விஷால் கூறியிருப்பதாவது, அது எல்லோரும் சேர்ந்து எடுத்த முடிவு என்பது உங்களுக்கு தெரியாதா,

- Advertisement -

அதில் தற்போது உங்களுடன் இருக்கும் திரு. கதிரேசனும் இருந்தார். மூத்த மற்றும் நலிந்த தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் அந்த நிதி பயன்படுத்தப்பட்டது. உங்க வேலையை ஒழுங்கா செய்யுங்க. சினிமா துறைக்கு நிறைய தேவை இருக்கிறது. இரட்டை வரி விதிப்பு, தியேட்டர் பராமரிப்பு கட்டணம் என இன்னும் பல விஷயங்கள் தீர்க்கப்பட வேண்டியிருக்கிறது.

விஷால் தொடர்ந்து படங்களில் நடிப்பார், முடிந்தால் தடுத்து பாருங்கள் என்று அந்த பதில் நடிகர் விஷால் மிகவும் காட்டமாக, தயாரிப்பாளர் சங்கத்துக்கு பதிலடி தந்துள்ளார். இப்போது விஷால் தமிழில் சமுத்திரக்கனி இயக்கும் படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இதுதவிர தெலுங்கில் அல்லு அர்ஜூனுக்கு வில்லனாக நடிக்கவும் ஒரு படத்தில் பேசப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளர் சங்கத்துக்கும், விஷாலுக்கும் உள்ள மோதல் போக்கு நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.

- Advertisement -

சற்று முன்