- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல நடிகர் பிரபாஸ் திருமணம் குறித்து கடுமையான வார்த்தைகளால் விமர்சித்த ராஜமௌலி - பாகுபலி...

பிரபல நடிகர் பிரபாஸ் திருமணம் குறித்து கடுமையான வார்த்தைகளால் விமர்சித்த ராஜமௌலி – பாகுபலி படத்தின் மாஸ் ஹீரோவை டைரக்டரே இப்படி பேசலாமா?

- Advertisement -

நடிகர் பிரபாஸ், தெலுங்கு நடிகராக இருந்தாலும் தமிழில் அவர் நடிப்பில் வெளிவந்த பாகுபலி படத்தை பார்த்த சினிமா ரசிகர்கள் அனைவருக்குமே அவர் மிகவும் பிடித்தமான ஒரு நடிகராக மாறிவிட்டார். பலருக்கும், அவர் நடிப்பில் முதலில் பார்த்த படமே பாகுபலியாக தான் இருக்கும் என்ற நிலையில், அசுரத்தனமான நடிப்பில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்தார்.

பாகுபலி முதல் மற்றும் இரண்டு என இரு பாகங்களிலுமே அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. காதல், சென்டிமென்ட், காமெடி, ஆக்‌ஷன் என எதிலுமே குறை சொல்ல முடியாத அளவுக்கு மிக அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் பிரபாஸ். அதே போல் இந்த படத்தில் தேவசேனா கேரக்டரில் பிரபாஸ்க்கு ஜோடியாக நடித்த அனுஷ்காவும் திறம்பட தன் நடிப்பை தந்திருந்தார்.

பாகுபலி படத்துக்கு பிறகுதான் பொன்னியின் செல்வன் போன்ற மன்னர்கால படங்களை எடுக்க இயக்குனர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. வேள்பாரி போன்ற வரலாற்று படங்களை இயக்க இயக்குனர் ஷங்கர் போன்றவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஏனெனில் பாகுபலி படத்தை மிக அற்புதமான திரைக்கதையில் படமாக்கி இருந்தார் டைரக்டர் ராஜமெளலி.

இப்போது நடிகர் பிரபாஸ் நடிப்பில் கல்கி படம் வெளிவர இருக்கிறது. இந்த படத்தின் டிரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய ஆர்வத்தை தூண்டியிருக்கிறது. 2 பாகங்களை இந்த படம் வெளிவர உள்ளது. இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் நடிகர் கமல்ஹாசன் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் பிரபாஸூக்கு இப்போது வயது 44 ஆகிறது. இன்னும் அவர் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கிறார். நடிகை அனுஷ்காவும், அவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துக்கொள்வதாகவும் தொடர்ந்து தகவல்கள் பரவிய நிலையில், இன்னும் அவர்கள் அதை உறுதிப்படுத்தவில்லை. அதே நேரத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் கன்னட தயாரிப்பாளர் ஒருவரை, அனுஷ்கா திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், பிரபாஸ் திருமணம் குறித்து பாகுபலி டைரக்டர் ராஜமௌலியிடம் கேட்ட போது, பிரபாஸ் ஒரு சோம்பேறி. ஒரு பெண்ணை கண்டுபிடித்து அவரது பெற்றோரிடம் சென்று பேசுவது அவருக்கு கஷ்டமாக இருக்கும். அதனால்தான் அவர் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன், என்று டைரக்டர் ராஜமௌலி கிண்டலாக கூறியிருப்பது, வைரலாகி வருகிறது.

சற்று முன்