- Advertisement -
Homeபொழுதுபோக்குஇரவில் கடற்கரையில் ரவுண்ட் அடிக்கும் நடிகர் விஷால்… உடன் வர பயப்படும் அவரது பிரண்ட்ஸ் -...

இரவில் கடற்கரையில் ரவுண்ட் அடிக்கும் நடிகர் விஷால்… உடன் வர பயப்படும் அவரது பிரண்ட்ஸ் – புரட்சித் தளபதி இதெல்லாம் பண்றாரா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். சினிமா தயாரிப்பாளராகவும் இருக்கிறார். மதகஜ ராஜா படத்தில் ஒரு பாடலும் பாடி இருக்கிறார். மேலும் சினிமா தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்த அவர் இப்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.

நடிகர் விஷாலை பொருத்த வரை ஆரம்பத்தில் நிறைய வெற்றிப் படங்களை கொடுத்தார். செல்லமே திமிரு சண்டக்கோழி சிவப்பதிகாரம் தாமிரபரணி பூஜை துப்பறிவாளன் மலைக்கோட்டை என பல படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தன. காதல் ஆக்சன் நாயகனாக தமிழ் சினிமாவில் அசத்தினார்.

ஆனால் கடந்த பல ஆண்டுகளாக அவரது பல படங்கள் தொடர்ந்து பெரிய தோல்வியை சந்தித்து வருகின்றன. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி படமும் சுந்தர் சி இயக்கத்தில் 12 ஆண்டுகளுக்கு முன் உருவான மதகஜ ராஜா ஆகிய 2 படங்கள் மட்டுமே அவருக்கு வெற்றி படங்களாக இருந்தன.

துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி நடிக்க முடிவு செய்த நடிகர் விஷால் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அந்த படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் யாரும் முன்வரவில்லை. தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரிக்கும் முயற்சியிலும் அவருக்கு வெற்றி கிட்டாததால் அந்த படத்தை இப்போதைக்கு கிடப்பில் போட்டுவிட்டார்.

மற்ற சில நடிகர்களை போலவே வறுமையில் கஷ்டப்படும் மக்களுக்கு உதவும் குணம் நடிகர் விஷாலிடம் காணப்படுகிறது. தென்மாவட்டத்தில் ஒருமுறை அவர் ஷூட்டிங் சென்ற போது, அங்குள்ள ஏழை மக்கள் தண்ணீருக்காக கஷ்டப்படுவதை அறிந்து அப்பகுதியில் தனது செலவில் போர்வெல் கிணறு அமைத்து அவர்களுக்கு தண்ணீர் கிடைக்க விஷால் ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகர் விஷால் கூறியதாவது, இரவு நேரங்களில் கடற்கரை பகுதியில் சும்மா சுற்றி வருவேன். அப்போது கடற்கரையில் இரவில் தூங்கும் சிலரிடம் ஏன் இங்கு படுத்து இருக்கிறீர்கள் என்று அவர்களின் கஷ்டங்களை கேட்டு அவர்களுடன் பேசுவேன். நான் போகும்போது வழியில் யாராவது கஷ்டத்தில் இருப்பதை பார்த்தால் என்னிடம் எவ்வளவு இருக்கிறதோ அதையும் என் கூட வந்த பிரெண்ட்ஸ் கிட்ட இருப்பதையும் வாங்கிக் கொடுத்து விடுவேன். அதுக்காகவே பிரெண்ட்ஸ் என்கூட வருவதற்கு பயப்படுவாங்க என்று நடிகர் விஷால் கூறியிருக்கிறார்.

சற்று முன்