- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயலலிதாவுடன் இருந்த நெருக்கமான உறவு - திடீரென முறிந்து போனது ஏன்? பிரபல நடிகர் சொன்ன...

ஜெயலலிதாவுடன் இருந்த நெருக்கமான உறவு – திடீரென முறிந்து போனது ஏன்? பிரபல நடிகர் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

தனது தனித்துவமான நடிப்பு உடல்மொழி குரல்வளம் காமெடி குணச்சித்திரம் மற்றும் ஹியூமர் சென்ஸ் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர் ஒய்ஜி மகேந்திரா. பாரம்பரிய நாடகக் குடும்பத்தைச் சேர்ந்தவர். பல நாடக மேடைகளில் இன்றும் தொடர்ந்து நடித்து வருகிறார். நடிகர் ரஜினிகாந்தின் சகலையாக இருப்பவர் ஒய்ஜி மகேந்திரா.

கடந்த 1970ம் ஆண்டு வெளியான நவக்கிரகம் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் டிவி தொடர்களில் நடித்துள்ளார். சிம்பு நடித்தமாநாடு படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். இதற்கிடையே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

அதில் நடிகர் ஒய்ஜி மகேந்திரா கூறியதாவது, ஜெயலலிதாவும் நானும் பல படங்களில் சேர்ந்து நடித்துள்ளோம். அவர் என்னை வாடா போடா என்று கூப்பிடும் அளவிற்கு உரிமையுடன் பழகுவார். நானும் அவரை அக்கா என்று அழைப்பேன். என் நிச்சயதார்த்த விழாவை அவர் முன்னின்று அனைவரையும் வரவேற்றார். அந்த அளவிற்கு எங்கள் குடும்பத்துடன் நெருக்கமாக இருந்தார்.

வார இறுதி நாட்களில் நாங்கள் அனைவரும் சேர்ந்து வெளியில் செல்வோம். நான் தொடங்கிய அறக்கட்டளையையும் அவர்தான் தொடங்கி வைத்தார். ஆனால் அவர் அரசியலுக்கு வந்த பிறகு சந்திக்கும் வாய்ப்பு குறைந்து விட்டது. என் 50வது ஆண்டு நாடக விழாவிற்கு, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியை திரைத்துறையின் மூத்தவராக அழைத்தேன்.

- Advertisement -

அவர் உடனே ஒப்புக் கொண்டு வந்து நிகழ்ச்சியை சிறப்பித்தார். ஒருவேளை இதுவும் காரணமாக இருக்கலாம். இருப்பினும் எம்எஸ் விஸ்வநாதனுக்கு நடந்த பாராட்டு விழாவில், கீழே இருந்த என்னைப் பார்த்து, அவன் நல்லா விசில் அடிப்பான். அதை செய்ய சொல்லுங்கள் என்று அருகில் இருந்தவரிடம் கூறியிருந்தார்.

இருந்தாலும், அதன் பிறகு எங்களது உறவு தொடரவில்லை என்று அந்த நேர்காணலில் நடிகர் ஒய்ஜி மகேந்திரா வெளிப்படையாக தெரிவித்துள்ளார். கடந்த 1980களில் ரஜினி கமல் நடித்த ஏராளமான படங்களில் காமெடி ரோலில் நடித்து அசத்தியவர் ஒய்ஜி மகேந்திரா. ரஜினிகாந்த் மனைவி லதாவும், ஒய்ஜி மகேந்திராவின் மனைவியும் உடன்பிறந்த சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்