- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரமோ நிகழ்ச்சிக்கு வர ரூ. 7 லட்சம் கேட்ட நடிகர் யோகிபாபு, மேடையில் ஆவேசமாக பேசிய...

பிரமோ நிகழ்ச்சிக்கு வர ரூ. 7 லட்சம் கேட்ட நடிகர் யோகிபாபு, மேடையில் ஆவேசமாக பேசிய தயாரிப்பாளர் – என்ன ப்ரோ இதெல்லாம்…?

- Advertisement -

நடிகர் யோகிபாபு ஆரம்பத்தில் சினிமாவில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தவர் காக்கா முட்டை படம் அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி தந்தது. தொடர்ந்து காக்கி சட்டை ரஜினி முருகன் சர்கார் கலகலப்பு போன்ற படங்கள் யோகிபாபுவுக்கு காமெடி நடிப்பில் பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.

தொடர்ந்து கோலமாவு கோகிலா டாக்டர் ஜெயிலர் மாவீரன் போன்ற பல படங்களில் யோகிபாபு நடிப்பு வேற லெவலில் இருந்தது. தவிர மண்டேலா படத்தில் கதையின் நாயகனாக அவர் நடித்திருந்தார். தர்ம பிரபு கூர்கா போட் போன்ற படங்களும் அவருக்கு நல்ல புகழை பெற்றுத் தந்தது. இப்போது மிகவும் பிஸியாக ஒரு நடிகராக யோகிபாபு இருந்து வருகிறார்.

- Advertisement -

ஆண்டவன் கட்டளை வாரிசு பிகில் அயலான் விஸ்வாசம் கடைசி விவசாயி பரியேறும் பெருமாள் கர்ணன் என பல படங்களில் யோகிபாபு நடித்து ரசிகர்களிடம் காமெடி நடிகராக அங்கீகாரம் பெற்றிருக்கிறார். சந்தானம் சூரி போன்றவர்கள் ஹீரோக்களாக மாறியதால் யோகிபாபுவுக்கு காமெடி ரோல் வாய்ப்பும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னையில் நேற்று கஜானா என்ற புதிய படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய அந்த படத்தின் தயாரிப்பாளர் ராஜா என்பவர், நடிகர் யோகிபாபு மீது குற்றச்சாட்டு எழுப்பினார். அப்போது அவர் கூறியதாவது, இந்த படத்தில் நடித்த யோகி பாபு பிரமோஷன் நிகழ்ச்சிக்கு வர மறுத்துவிட்டார். அதற்கு தனியாக 7 லட்சம் ரூபாய் கேட்கிறார். இது தவறு. அவர் நடிக்கவே லாயக்கற்றவர் இது மிகவும் மோசமான செயல் என்று குற்றம் சாட்டி பேசினார்.

- Advertisement -

ஆனால் இதற்கு பதில் அளித்துள்ள நடிகர் யோகிபாபு தரப்பினர் கூறியிருப்பதாவது, அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஷாம் என்பவர்தான். இவர் யார் என்றே தெரியாது. பல ஆண்டுகளாக இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு ஊரில் யோகிபாபு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு யோகிபாபு சென்றால் சம்பந்தப்பட்ட படப்பிடிப்புக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். இதனால் பல லட்சம் ரூபாய் இழப்பை தயாரிப்பாளர் சந்திக்க நேரிடும். இதை மற்ற படக்குழுவினரும் புரிந்து கொள்ள வேண்டும் ஆனாலும் முடிந்தவரை யோகிபாபு, அவர் நடித்த படத்தின் நிகழ்ச்சிகளுக்கு சென்று வருகிறார் என்று ஒரு விளக்கம் தரப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்