தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. துவக்கத்தில் சின்ன சின்ன கேரக்டர்களில் ஆரம்பத்தில் சில படங்களில் நடித்த அவர் பிறகு காக்கா முட்டை படத்தில் நடித்து பிரபலமானார். இதில் யோகிபாபு பேசிய, எனக்கே விபூதி அடிக்க பார்த்தே இல்லே நீ? என்று பேசிய வசனம் பலரையும் வெகுவாக கவர்ந்தது.
அதே நேரத்தில் சந்தானம் சூரி போன்ற காமெடி நடிகர்கள் ஹீரோவாக மாறிய நிலையில், தமிழ் சினிமாவில் காமெடிக்கு பஞ்சம் ஏற்பட்ட நிலையில் அடுத்ததாக யோகிபாபுவுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு தானாகவே அமைந்தது. இதனால் அவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
குறிப்பாக கோலமாவு கோகிலா டாக்டர் படங்களில் யோகிபாபு நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. மேலும் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மண்டேலா படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார். பெரிய அளவில் இந்த படத்தில் யோகிபாபு நடிப்பு பேசப்பட்டது.
இரண்டு கிராமங்களுக்கு இடையே நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் யோகிபாபு யாருக்கு ஓட்டுப் போடுகிறாரே, அவர்தான் அடுத்த தலைவர் என்ற நிலையில் இந்த படத்தில் யோகிபாபு நடிப்பு சிறப்பாக இருந்தது. மரத்தடியில் சலூன் கடை நடத்தும் நாவிதர் கேரக்டரில் யோகிபாபு வாழ்ந்திருந்தார்.
யோகிபாபு, நடிகர் அஜீத்குமாருடன் சில படங்களில் காமெடி ரோலில் நடித்திருக்கிறார். குறிப்பாக வருகிற 6ம் தேதி வெளியாகும் விடாமுயற்சி படத்திலும் அஜீத்குமாருடன் காமெடி ரோலில் நடித்திருக்கிறார். இப்போது கார் ரேஸ் பந்தயத்தில் 3ம் இடத்தில் வெற்றி பெற்ற அஜீத்குமாருக்கு, மத்திய அரசும் பத்ம பூஷன் விருதை அறிவித்துள்ளது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் யோகிபாபு, அஜீத்குமார் நடிப்பில் எவ்வளவு பெரிய சாதனையை படைத்திருக்கிறார். நாம் அனைவரும் அவரை பாராட்ட வேண்டும். அவருக்கு நாம் அனைவரும் சேர்ந்து பெரிய பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார். அவரது இந்த கருத்து, இணையத்தில் வைரலாகி வருகிறது.





