- Advertisement -
Homeபொழுதுபோக்குஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜயிடம் நான் பார்த்த 2 விஷயங்கள் - நடிகர் யோகிபாபு தந்த...

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜயிடம் நான் பார்த்த 2 விஷயங்கள் – நடிகர் யோகிபாபு தந்த ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் அவ்வப்போது சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருபவர் யோகிபாபு. அவரது ஹேர்ஸ்டைல் நக்கலான டயலாக் டெலிவரி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்போது காமெடியில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக யோகிபாபு இருந்து வருகிறார்.

சந்தானம் சூரி வடிவேலு சதீஷ் என காமெடி நடிகர்கள் பலரும் ஹீரோக்களாக நடிக்க போனதால் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அதனால் யோகிபாபுவுக்கு காமெடி ரோல் வாய்ப்புகள் அதிகளவில் வருகின்றன. தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் நிறைய படங்களில் யோகிபாபு காமெடி ரோல்களில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நடிகர் விஜயுடன் மெர்சல் பிகில் உள்பட 5 படங்களில் நடித்தவர் நடிகர் யோகிபாபு. அதே போல் ரஜினியுடன் தர்பார் படத்திலும் இணைந்து யோகிபாபு நடித்திருந்தார். அஜீத்குமார் படங்களிலும் யோகிபாபு நடித்திருக்கிறார். மேலும் கூர்கா மண்டேலா தர்மபிரபு போன்ற படங்களில் கதையின் நாயகனாகவும் அவர் நடித்துள்ளது கவனிக்கத்தக்கது.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் யோகிபாபு கூறியதாவது, நான் நடிகர் விஜயிடம் இருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் இரண்டு. அதாவது நேரம் தவறாமை. அவர் பஞ்ச்வாலிட்டியில் மிகவும் கவனமாக இருப்பார். காலையில் 9 மணிக்கு ஷூட்டிங் என்றால் 7 மணி 8 மணிக்கு எல்லாம் ஸ்பாட்டுக்கு வந்து விடுவார்.

- Advertisement -

நான் அவருடன் 5 படங்களில் நடித்திருக்கிறேன். எல்லா படங்களிலும் அப்படிதான். எல்லோருக்கும் முன்னாடி அவர்தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பார். அதே போல் அவர் என்னிடம் பேசும் போது சொன்ன ஒரு விஷயம் எதையுமே காதுலயே போட்டுக்க கூடாது என்பார். அதாவது நம்மை பற்றிய வருகிற நெகட்டிவ் விஷயங்கள் எதையும் காதில் போட்டுக்கொள்ள கூடாது.

இந்த காதில் வாங்கி அந்த காது வழியாக வெளியே விட்டுவிட வேண்டும். அந்த மாதிரியான விஷயங்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. நாம் வேலையில் தான் முழு கவனமாக இருக்க வேண்டும். வேலைதான் ரொம்ப முக்கியம் என்று என்னிடம் பேசும்போது சொல்லியிருக்கிறார் என்று நடிகர் யோகிபாபு கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்