- Advertisement -
Homeபொழுதுபோக்குசொன்ன மாதிரியே எனக்கு 2 தடவை பிரதீப் ரங்கநாதன் அதை வாங்கி தந்து விட்டார் -...

சொன்ன மாதிரியே எனக்கு 2 தடவை பிரதீப் ரங்கநாதன் அதை வாங்கி தந்து விட்டார் – விழா மேடையில் பெருமையாக பேசிய பிரபல காமெடி நடிகர்!

- Advertisement -

சினிமாவில் நடிக்க வந்த ஆரம்பத்தில் பல நடிகர்கள் உருவக் கேலிக்கு ஆளானவர்கள்தான். அதுவும் நடிகர்கள் ரஜினிகாந்த் விஜய் சூர்யா தனுஷ் வடிவேலு யோகிபாபு போன்ற பலரும் அப்படிப்பட்ட விமர்சனங்களில் சிக்கியவர்கள்தான். ஆனால் இன்று அவர்களை தவிர்த்துவிட்டு தமிழ் சினிமா வரலாறை சொல்ல முடியாது என்கிற அளவுக்கு அவர்கள் சாதித்து காட்டியிருக்கின்றனர்.

குறிப்பாக நடிகர் யோகிபாபுவை அவரது முகத்தை மிக கடுமையான வார்த்தையால் விமர்சித்தவர்களும் உண்டு. ஆனால் இப்போது தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் காமெடி நடிகர்களில் அவரும் ஒருவராக இருக்கிறார். மண்டேலா கூர்கா தர்மபிரபு போன்ற படங்களில் கதையின் நாயகனாகவும் அவர் நடித்திருக்கிறார்.

- Advertisement -

காமெடி நடிப்பில் மட்டுமின்றி குணச்சித்திர நடிப்பிலும் யோகிபாபு சில படங்களில் அசத்தி இருக்கிறார். குறிப்பாக மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய கோமாளி லவ் டுடே படங்களில் யோகிபாபு நடிப்பு வேற லெவலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

சினிமா விருது வழங்கும் விழா ஒன்றில் பங்கேற்ற நடிகர் யோகிபாபு பேசியதாவது, என்னோட இந்த மூஞ்சியை வெச்சு ஏதாவது ஒண்ணு பண்ணனும் என்று டைரக்டர்கள் யோசிக்கிறாங்க. இயக்குனர் மாரி செல்வராஜ், பிரதீப் ரங்கநாதன் போன்றவர்கள் என்னை நல்ல கேரக்டர்கள் தந்தாங்க. கோமாளி படத்துக்கும் பிரதீப் ரங்கநாதன் சொன்னார். அதே மாதிரி லவ்டுடே படத்துக்கும் சொன்னார்.

- Advertisement -

சார் உங்களுக்கு நான் கண்டிப்பா காமெடிக்கு வாங்கித் தர மாட்டேன். நீங்க வேணா பாருங்க. கோமாளி படத்துல ஒரு கேரக்டருக்கு நீங்க விருது வாங்குவீங்கன்னு சொன்னார். அதே மாதிரி வாங்கி தந்துட்டார். லவ் டுடே படத்துக்கும் சொன்னார். அதே மாதிரி அந்த படத்துக்கும் எனக்கு விருது கிடைச்சது. இப்போ மூனாவதா ஒரு படம் சொல்லிட்டு இருக்கிறார். அதுக்கும் வாங்கி கொடுப்பார் என்று நினைக்கிறேன்.

அதனால் எல்லாமே டைரக்டர்ஸ் யோசிக்கறதுதான். நாம ஒண்ணும் யோசிக்கிறது இல்லை. மண்டேலா படத்தில் நடிச்சேன். அஸ்வின் டைரக்ட் செய்தார். அவர் யோசித்தது அந்த முகம். அந்த கேரக்டருக்கு தேவைப்படுது. ஓட்டுக்கு ஒருத்தன் தேவைப்படறான் என்கிற போது என்னை வைத்து யூஸ் பண்ணிக்கிட்டார். நானும் அதை யூஸ் பண்ணிக்கிட்டேன் என்று அந்த நிகழ்ச்சியில் நடிகர் யோகிபாபு பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்