தமிழ் சினிமாவில் நடிகர் பிரபு இளைய திலகம் என்று அழைக்கப்படுகிறார். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் இளைய மகன் என்பதால் இளைய திலகம் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். சங்கிலி படம் மூலம் நடிகரான பிரபு, பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.
குறிப்பாக சின்ன தம்பி கிழக்குவாசல் சின்னதம்பி பெரிய தம்பி தாலாட்டு கேக்குதம்மா பெரிய தம்பி குரு சிஷ்யன் தர்மத்தின் தலைவன் வெற்றிவிழா சிறைச்சாலை அக்னி நட்சத்திரம் என பல படங்களில் பிரபுவின் நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
சத்யராஜ் போலவே கடந்த பல ஆண்டுகளாக குணச்சித்திர வேடங்களில் அப்பா அண்ணன் போலீஸ் அதிகாரி கேரக்டர்களில் பிரபு நடித்து வருகிறார். அதிலும் குறிப்பாக டிவி விளம்பரங்களில் அதிகமாக பிரபுவை காண முடிகிறது. தனது மருமகன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் பிரபு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதாக தெரிய வருகிறது.
நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும் சினிமாவில் நடித்து வருகிறார் கும்கி இவன் வேற மாதிரி டாணாக்காரன் புலிக்குத்தி பாண்டி சிகரம் தொடு வெள்ளக்கார துரை உள்ளிட்ட பல படங்களில் விக்ரம் பிரபு நடித்திருக்கிறார். இந்நிலையில் நடிகர் பிரபு திடீரென உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூளையில் அவருக்கு வீக்கம் இருந்ததாகவும் அது வெற்றிக்கரமாக அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யப்பட்டு, இப்போது நலமாக பிரபு வீடு திரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதே போல் இசையமைப்பாளர் இளையராஜா தம்பியும், இயக்குனர் வெங்கட்பிரபுவின் அப்பாவுமான இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு தற்போது 77 வயதாகிறது. சிவகங்கை பகுதியில் ஒரு படத்தின் ஷூட்டிங் இருந்த கங்கை அமரனுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது.
உடனடியாக மானாமதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர், மதுரைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்குள்ள பிரபல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். நடிகர் பிரபு மற்றும் கங்கை அமரன் உடல்நலம் பாதித்த சம்பவங்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.





