- Advertisement -
Homeபொழுதுபோக்குதிருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் யோகி பாபு, ஜெயிலர் 2 படம்...

திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் யோகி பாபு, ஜெயிலர் 2 படம் குறித்து அவர் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் சின்ன சின்ன காட்சிகளில் நடித்தவர் நடிகர் யோகிபாபு. பிறகு சில படங்களில் காமெடி காட்சிகளில் நடிக்க ஆரம்பித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். குறிப்பாக காக்கா முட்டை ரெமோ கோலமாவு கோகிலா டாக்டர் பரியேறும் பெருமாள் உள்ளிட்ட சில படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தன.

ஒரு கட்டத்தில் காமெடி நடிப்பில் இருந்து கதையின் நாயகனாக மாறிய நடிகர் யோகிபாபு மண்டேலா படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தில் மரத்தடியில் சலூன் கடை நடத்தி வரும் அவரது ஒரு ஓட்டுதான் 2 கிராமங்களில் நடக்கும் தேர்தலில் யார் பஞ்சாயத்து தலைவர் என்பதை தீர்மானிக்கும் என்ற ஒரு சூழல் ஏற்படும்.

ஒரு சவரத்தொழிலாளியாக ஆரம்பத்தில் அலட்சியப்படுத்தப்பட்ட யோகிபாபுவை, ஊரே உதாசீனம் செய்து ஒதுக்கிய அவரை ஒரு கட்டத்தில் 2 கிராமங்களின் மக்களும் பஞ்சாயத்து தலைவருக்கு போட்டியிடும் வேட்பாளர்களும் ராஜாவை போல கவனித்துக்கொள்ளும் நிலை ஏற்படும். இப்படிப்பட்ட சுவாரசியமான காட்சிகளுடன் அந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.

அதே போல் கூர்கா தர்மபிரபு உள்ளிட்ட படங்களிலும் யோகிபாபு பிரதான கேரக்டரில் நடித்திருந்தார். பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் கோமாளி லவ்டுடே படங்களில் சிறந்த நடிப்பை வெளி்பபடுத்திய யோகி பாபுவுக்கு விருதுகளும் கிடைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் முக்கியத்துவம் பெற்ற ஒரு நடிகராக அவர் வலம் வருகிறார்.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் 2ம் பாகம் ஜெயிலர் 2 படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஜெயிலர் படத்தில் நடித்த யோகிபாபு இந்த 2ம் பாகத்திலும் நடிக்கிறார். இயக்குனர் நெல்சன் தனது படங்களில் தொடர்ந்து நடிகர் யோகிபாபுவுக்கு வாய்ப்பு தருகிறார். ஜெயிலர் படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2 படத்திலும் யோகிபாபு நடித்து வருகிறார். கடவுள் பக்தி அதிகம் கொண்ட நடிகர் யோகிபாபு அடிக்கடி திருத்தணி,மருதமலை, திருச்செந்தூர், பழனிமலை முருகன் கோவில்களுக்கு செல்வதை வழக்கம்.

சமீபத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்த யோகிபாபு சுவாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்செந்தூர் முருகன் எனக்கு தொடர்ந்து வெற்றிகளை தந்து வருகிறார். ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவம் பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. இப்போது ஜெயிலர் 2 படத்திலும் நடித்து வருகிறேன். முதல் பாகம் போலவே 2ம் பாகமும் சிறப்பாக உள்ளது. அதிலும் ரஜினி நடித்து வரும் காட்சிகள் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்