- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத்குமார், விவேக் செய்த அந்த விஷயங்கள், கடைசியில் கலாய்த்து சிரித்த படக்குழுவினர் - அட இப்படி...

அஜீத்குமார், விவேக் செய்த அந்த விஷயங்கள், கடைசியில் கலாய்த்து சிரித்த படக்குழுவினர் – அட இப்படி போய் பல்பு வாங்கிட்டாங்களே?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் எந்தவிதமான சினிமா பின்புலமும் இல்லாமல் நடிகர் ஆனவர். விளம்பர படங்களில் நடித்த அவரை, ஆசை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்தவர் இயக்குநர் வசந்த். அதன்பிறகு அகத்தியன் இயக்கிய காதல் கோட்டை படம், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை, வரவேற்பை பெற்றுத் தந்தது.

தொடர்ந்து நல்ல படங்களில் நடித்துவந்த அஜீத்குமாருக்கு, வாலி படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ஹீரோ, வில்லன் என இரண்டு கேரக்டர்களில் மாறுபட்ட நடிப்பை தந்து அஜீத்குமார், முன்னணி வரிசை கதாநாயகனாக மாறினார். இந்த வெற்றியில் இயக்குநர் எஸ்ஜே சூர்யாவுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.

- Advertisement -

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் நடித்த அமர்க்களம் படப்பிடிப்பு நடந்துள்ளது. இந்த படத்தில் அஜித்குமாருக்கு ஜோடியாக ஷாலினி நடித்தார். இந்த படத்தில் நடித்த போதுதான் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. அதன்பிறகுதான் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதனால், அஜீத்குமார், ஷாலினி வாழ்வில் இது திருப்புமுனையாக அமைந்த படம்.

இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, படத்தின் இயக்குநர் சரண், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பைக்கில் வந்துள்ளார். இதைப்பார்த்த அஜீத்குமார், இவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த அஜீத்குமார், சரணுக்கு புதிய கார் ஒன்றை வாங்கி பரிசளித்து இருக்கிறார். அதற்கு பிறகுதான் தெரிய வந்திருக்கிறது, சரணுக்கு கார் ஓட்டத் தெரியாது. அவரது வீட்டில் ஏற்கனவே கார் இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இந்த விஷயத்தில் அஜீத், பல்பு வாங்கியதாக படக்குழுவினர் சொல்லி சொல்லி சிரித்துள்ளனர்.

- Advertisement -

அதே போல் நடிகர் விவேக் வாழ்விலும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. தன்னுடன் நடிக்கும் ஜூனியர் நடிகர் ஒருவர் ஷூட்டிங்குக்கு சைக்கிளில் வந்திருக்கிறார். அதை பார்த்து மனம் வருந்திய விவேக், அவருக்கு பைக் ஒன்றை வாங்கி பரிசளித்து இருக்கிறார். ஆனால் பைக் சாவியை அந்த ஜூனியர் நடிகர் ஆர்வமின்றி வாங்கி இருக்கிறார். அப்போதுதான் தெரிந்திருக்கிறது, அந்த நடிகருக்கு பைக் ஓட்டத் தெரியாதாம்.

இந்த இரண்டு விஷயங்களில் மனிதாபிமானத்துடன் அஜீத்குமார், விவேக் உதவிதான் செய்திருக்கின்றனர். ஆனால் அந்த உதவிகளை பற்றி தம்பட்டம் அடிக்காமல் சஸ்பென்ஸாக அவர்கள் செய்த விஷயம், கடைசியில் மற்றவர்கள் அவர்களை பல்பு வாங்கியவர்களாக கலாய்க்கும் அளவுக்கு மாற்றி இருக்கிறது. அதனால் உதவிகளை கூட விசாரித்துதான் செய்ய வேண்டும் என்று, இவர்களது வாழ்க்கை பாடம், மற்றவர்களுக்கு கற்றுத் தருகிறது.

- Advertisement -

சற்று முன்