தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி இன்று நடிகராக அசத்தி கொண்டிருப்பவர் எஸ்ஜே சூர்யா. நடிகர் அஜீத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த வாலி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான எஸ்ஜே சூர்யா அடுத்து விஜய் ஜோதிகா நடித்த குஷி என்ற மாபெரும் வெற்றிப் படத்தையும் கொடுத்தார்.
பிறகு நியூ அன்பே ஆருயிரே கள்வனின் காதலி வியாபாரி திருமகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த எஸ்ஜே சூர்யா திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார். சுமார் 10 ஆண்டுகள் கழித்து பிறகு இறைவி படம் மூலம் நடிகராக ரீ என்ட்ரி கொடுத்த எஸ்ஜே சூர்யா செகண்ட் ரவுண்டில் நடிப்பு அரக்கனாக ரசிகர்களை மிரட்டி வருகிறார்.
தொடர்ந்து பல படங்களில் வில்லன் ரோலில் நடித்து வரும் எஸ்ஜே சூர்யாவின் ஆரம்ப கால வாழ்க்கை மிகவும் துயரங்கள் நிறைந்தது. ஓட்டலில் சர்வர் வேலை செய்திருக்கிறார். இயக்குனர் வசந்திடம் உதவி இயக்குனராக பணி செய்திருக்கிறார். ஒரு டிரஸ்சை 4 நாட்கள் கூட போட்டுக்கொண்டு பணி செய்திருக்கிறார். ஆனால் இன்று ஒரு நட்சத்திர நடிகராக உச்சத்தில் இருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் எஸ்ஜே சூர்யா கூறியதாவது, இது தமிழ்நாட்டுக்கே தெரியும். என்னை இயக்குனர் ஆக்கியவர் நடிகர் அஜீத்குமார் தான். இப்போது நான் இந்த நிலையில் இருப்பதற்கு அவர்தான் காரணம். அஜீத்குமார் இல்லை என்றால் எஸ்ஜே சூர்யா இல்லை என்பதுதான் உண்மை.
இன்று நான் ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறேன். எல்லோரும் ஓரளவுக்கு மதிக்கத்தக்க ஒரு இடத்தில் இருக்கிறேன் என்றால் அஜீத்குமார் தான் காரணம். ஏனென்றால் அப்போது நான் யாரும் மதிக்கத்தக்க ஒரு தோற்றத்தில் இருக்க மாட்டேன்.
அப்படிப்பட்ட ஒரு லுக்கில் இருந்த என்னை கூப்பிட்டு எனக்குள் இருக்கிற திறமையை மதித்து எனக்கு ஒரு இயக்குனராக வாய்ப்பு கொடுத்தார் என்று அந்த நேர்காணலில் இயக்குனர் எஸ்ஜே சூர்யா பேசியிருக்கிறார். மெர்சல் படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடித்தது போல் நடிகர் அஜீத்குமாருக்கும் வில்லனாக அவர் விரைவில் நடிப்பார் என்றும் ஒரு தகவல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.





