- Advertisement -
Homeபொழுதுபோக்குஎம் எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி எம் கிருஷ்ணாவுக்கு விருது வழங்க தடை -...

எம் எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி எம் கிருஷ்ணாவுக்கு விருது வழங்க தடை – மியூசிக் அகாடமிக்கு கோர்ட் உத்தரவு!

- Advertisement -

இசைத்துறையில் ரசிகர்களால் இசையரசி என கொண்டாடப்படுவர் எம் எஸ் சுப்புலட்சுமி. இப்போது அவரது தேன் மதுரக் குரலில் குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி என் பாடலை கேட்டால் பக்தி பரவசத்தில் பக்தர்கள் மனம் உருகுகிறது. இசையில் பல சாதனைகளை படைத்த இசையரசி என்று கொண்டாடப்படுபவர் எம் எஸ் சுப்புலட்சுமி.

இந்நிலையில் இசையரசி எம் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி எம் கிருஷ்ணாவுக்கு விருது வழங்க மியூசிக் அகாடமிக்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது. பாடகர் டி எம் கிருஷ்ணாவுக்கு சென்னை மியூசிக் அகாடமி சார்பில் இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை அறிவித்தது. டி எம் கிருஷ்ணா திரைப்படங்களுக்கும் பின்னணி பாடியிருக்கிறார்.

இந்த விருதுடன் எம்எஸ் சுப்புலட்சுமி பெயரில் 1 லட்சம் ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்பட உள்ளது. மியூசிக் அகாடமியில் இந்த முடிவு கர்நாடக இசை கலைஞர்களிடையே கடும் அதிர்ச்சியையும் மன வேதனையையும் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

ஏனெனில் இசை்யரசி எம் எஸ் சுப்புலட்சுமி குறித்து மிக மோசமாக விமர்சித்த பாடகர் டி எம் கிருஷ்ணாவுக்கு எப்படி எம் எஸ் சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்கலாம் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த பிரச்சனை பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து டி எம் கிருஷ்ணாவுக்கு எம் எஸ் சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்குவதை எதிர்த்து எம் எஸ் சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். எம் எஸ் சுப்புலட்சுமியை கடுமையாக விமர்சித்த பாடகர் டி எம் கிருஷ்ணாவுக்கு இந்த விருதை வழங்க கூடாது என்று அவர் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் எம் எஸ் சுப்புலட்சுமி பெயரில், பாடகர் டி எம் கிருஷ்ணாவுக்கு விருது வழங்க மியூசிக் அகாடமிக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் எம் எஸ் சுப்புலட்சுமி பெயர் இல்லாமல் இந்த விருதை வழங்கலாம் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். இது கர்நாடக இசைத்துறையில் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்