- Advertisement -
Homeபொழுதுபோக்குபரவாயில்லையே… இந்த விஷயத்துல நடிகர் சங்கத்தை பாராட்டலாமுன்னு சொல்ற மாதிரி செஞ்சுட்டாங்களே? - அவரை இன்னும்...

பரவாயில்லையே… இந்த விஷயத்துல நடிகர் சங்கத்தை பாராட்டலாமுன்னு சொல்ற மாதிரி செஞ்சுட்டாங்களே? – அவரை இன்னும் மறக்காம இருக்காங்களே?

- Advertisement -

தேமுதிக தலைவர், நடிகர் கேப்டன் விஜயகாந்த் பிறந்த நாள் இன்று தமிழ்நாடு முழுவதும் அவரது கட்சியினர் சார்பில் கொண்டாடப்பட்டது. சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில், விஜயகாந்த் திருவுருவ சிலை திறப்பு விழா நடந்தது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் தேமுதிக கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர். இந்த விழாவில் கூட்டத்தில் நெரிசலில் சிக்கிய சண்முக பாண்டியன் மயங்கி விழுந்தார். அதன்பின் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, நலமாக இருக்கிறார்.

விஜயகாந்த் பிறந்தநாளான இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தேமுதிக கட்சியினர் சார்பில் விஜயகாந்த் படத்துக்கு மலர்மாலை அணிவித்து பூக்கள் தூவி மரியாதை செலுத்தினர். பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது. நலத்திட்ட உதவிகளும் கட்சி நிர்வாகிகள் தரப்பில் செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா நடந்தது. நடிகர் சங்க வளாகத்தில் விஜயகாந்தின் புகைப்படம் வைத்து பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி விஜயகாந்த் மறைந்த நிலையில், அவரது பிறந்த நாளை மறக்காமல் நடிகர் சங்கம் தரப்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், துணைத் தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ், செயற்குழு உறுப்பினர்கள், நியமன செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பூக்களை தூவினர்.

விஜயகாந்த் மறைந்த போது, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சரியான அஞ்சலி செலுத்தப்படவில்லை, குறிப்பாக சங்கத் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை. மேலும் இறுதி சடங்கு நிகழ்ச்சியிலும் சங்க நிர்வாகிகள் கலந்துக்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பிறகு சங்கம் சார்பில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த விஜயகாந்துக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இப்போது அவரது மறைவுக்கு பிறகு, முன்னாள் சங்கத் தலைவர் என்ற முறையில் கேப்டனுக்கு நடிகர் சங்கம் மரியாதை செலுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்