- Advertisement -
Homeபொழுதுபோக்குஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் மணிவண்ணன் எனக்கு தந்த அட்வைஸ்… அவர் சொன்ன மாதிரியே பிறகு நடந்தது...

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் மணிவண்ணன் எனக்கு தந்த அட்வைஸ்… அவர் சொன்ன மாதிரியே பிறகு நடந்தது – ஓபனாக பேசிய இயக்குனர் ஏ வெங்கடேஷ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஏ வெங்கடேஷ். பகவதி ஏய் மலை மலை நிலாவே வா துரை வாத்தியார் தம் சாணக்யா மாஞ்சா வேலு மகாபிரபு உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர். விஜய் சரத்குமார் சிம்பு கார்த்திக் அர்ஜூன் போன்ற முன்னணி ஹீரோக்களை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் வெளியான பகவதி நிலவே வா ஏய் தம் சாணக்யா மகாபிரபு போன்ற சில படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. இந்த படங்களில் நடித்த ஹீரோக்களுக்கும் பெரிய வெற்றியை அந்த படங்கள் தேடித் தந்தன. அதிரடி சண்டை காட்சிகளுடன் காதல் கதைகள் குடும்ப கதைகளை தந்து இயக்குனர் ஏ வெங்கடேஷ் ரசிகர்களை திருப்திப்படுத்தினார்.

- Advertisement -

ஆனால் ஒரு கட்டத்தில் இயக்குனர் ஏ வெங்கடேஷ் திரைப்பட நடிகராகவும் மாறினார். குறிப்பாக அங்காடித் தெரு தொடரி அசுரன் என பல படங்களில் நடித்தும் இருக்கிறார். இதில் அங்காடித்தெரு படத்தில் வில்லன் கேரக்டரில் துணிக்கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களை மிரட்டி அடித்து உதைக்கும் ஒரு வில்லன் கேரக்டரில் ஏ வெங்கடேஷ் நடிப்பு வேற லெவலில் இருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் மற்றும் நடிகர் ஏ வெங்கடேஷ் கூறியதாவது, நான் அடுத்த படம் பண்றதுக்காக ஒரு ஹீரோவை தொடர்ந்து அப்ரோச் பண்ணிட்டே இருக்கிறேன். அவரு அந்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வாங்க இந்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வாங்க அங்க வாங்க இங்க வாங்க சொல்லிட்டே இருக்கிறார்.

- Advertisement -

நானும் விடாமல் அவரை பாலோ அப் பண்ணிட்டே இருக்கிறேன். அப்படி ஒருமுறை நான் ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போன போது அங்கு நடிகர் மணிவண்ணன் சார் நடிச்சிட்டு இருக்கிறார். நாலு படம் பண்ணியிருந்தாலும் நாம இங்கே ஹீரோவுக்காக நிற்கிறோமே, செட்ல யாராவது பார்ப்பாங்களே அப்படீன்னு நான் ஒதுங்கி நின்னுட்டு இருக்கேன்.

அப்போ மணிவண்ணன் சார் என்னை பார்த்து கை காட்டினார். நானும் கை காட்டினேன். ஷாட் கேப்ல என்னை பார்க்க அப்படியே வந்தார். என்ன சார் இங்கே அப்படீன்னார். இப்படி ஹீரோவுக்காக கதை சொல்ல வந்துட்டு இருக்கேன் என்று சொன்னேன். அலையாதீங்க சார். கால்ஷீட் எல்லாம் கொடுக்க மாட்டாங்க சார். நீங்க போய் எப்படியாவது போராடி ஒரு ஹிட் கொடுங்க. அப்புறம் இந்த ஹீரோவே தேடி வருவார் என்றார். அதுபோலவே நான் போராடி ஒரு ஹிட் படம் கொடுத்த பிறகு, அந்த ஹீரோ என்னுடன் படம் பண்ண அழைத்தார் என்று இயக்குனர் ஏ வெங்கடேஷ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்