- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு காலத்துல சினிமாக்காரனுக்கு பொண்ணே தர மாட்டாங்க, சினிமாக்காரன் அரசியலுக்கு வரலாமா? - விளாசித் தள்ளிய...

ஒரு காலத்துல சினிமாக்காரனுக்கு பொண்ணே தர மாட்டாங்க, சினிமாக்காரன் அரசியலுக்கு வரலாமா? – விளாசித் தள்ளிய பிரபல இயக்குனர்!

- Advertisement -

கடந்த 1988ம் ஆண்டில் வெளியான உரிமை கீதம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஆர்வி உதயகுமார். தொடர்ந்து எஜமான் சின்னக்கவுண்டர் ராஜகுமாரன் புதிய வானம் சுபாஷ் கிழக்கு வாசல் உறுதிமொழி சிங்காரவேலன் பொன்னுமணி நந்தவனத்தேரு போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியவர்.

ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜயகாந்த் பிரபு கார்த்திக் என முன்னணி நட்சத்திர ஹீரோக்களை இயக்கிய ஆர்வி உதயகுமார் இப்போது தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவராகவும் இருந்து வருகிறார். மேலும் சமீபகாலமாக ஆர்வி உதயகுமார் பல படங்களில் நடித்து வருகிறார். நடிப்பிலும் அவர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

- Advertisement -

ஆர்வி உதயக்குமார் அவர் இயக்கிய எஜமான் சின்னக்கவுண்டர் போன்ற சில படங்களில் ஓரிரு காட்சிகளில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்திருக்கிறார். அதாவது கேஎஸ் ரவிக்குமார் அவர் இயக்கும் படத்தில் ஒரு காட்சியில் வருவது போல ஆர்வி உதயகுமாரும் அவரது படங்களில் சில காட்சிகளில் வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். இப்போது அவரும் ஒரு முக்கிய கேரக்டரில் பல படங்களில் நடித்து வருகிறார்.

கடந்தாண்டில் சூரி நடிப்பில் வெளியான கருடன் படத்தில் அரசியல்வாதி கேரக்டரில் ஆர்வி உதயகுமார் நடித்திருந்தார். அதே போல் தொடரி தேவி என்னை அறிந்தால் மாறன் பசங்க 2 கருமேகங்கள் கலைகின்றன அஞ்சல பாம்பு சட்டை என பல படங்களில் முக்கிய கேரக்டர்களில் ஆர்வி உதயகுமார் நடித்திருக்கிறார். தொடர்ந்தும் பல படங்களில் அவர் நடித்து வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் சென்ட்ரல் என்ற படத்தின் விழாவில் பங்கேற்ற இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்வி உதயகுமார் பேசியதாவது, சினிமாக்காரன் என்றாலே பெண் கொடுக்க யோசிப்பார்கள். மதிக்கவே மாட்டார்கள். அதேபோல் சினிமாக்காரன் அரசியலுக்கு வரக்கூடாது என்றும் சொல்கிறார்கள்.

அப்படி யாரும் சொல்ல முடியாது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். வந்த பிறகு என்ன செய்கிறார்கள் என்பதுதான் முக்கியம். எனவே சினிமாக்காரனை அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்று இயக்குனர் ஆர்வி உதயகுமார் பரபரப்பாக பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்