சிலரது பேரை சொன்னாலே அவர் ரொம்பவும் வம்பு பிடிச்ச ஆளாச்சே என்ற விமர்சனம் உடனே வெளிப்படும். அப்படி ஒரு பெருமைக்கும் பாராட்டுக்கும் சொந்தக்காரர்களாக தமிழ் சினிமாவிலும் சிலர் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர்தான் நடிகை வனிதா விஜயகுமார். நடிகர் விஜய்குமார் – மஞ்சுளா தம்பதியின் மூத்த மகள்.
வனிதா விஜயகுமார் எங்கு சென்றாலும் ஏதாவது ஒரு வம்பை விலைக்கு வாங்கி விடுவார் என்ற விமர்சனம் ரசிகர்களிடம் இருந்து வருகிறது. சண்டையும் சச்சரவும் சச்சரவும் என் பரம்பரை சொத்து என்பது போல நடிகை வனிதா விஜயகுமார் பிக்பாஸ் வீட்டுக்குள் செய்த அலப்பறைகளும் அட்ராசிட்டிகளையும் பிக்பாஸ் ரசிகர்களால் மறக்கவே முடியாது.
ஆரம்பத்தில் விஜயுடன் சந்திரலேகா என்ற படத்தில் அவர் நடித்தார். அடுத்து மாணிக்கம் உள்ளிட்ட இன்னும் சில படங்களில் நடித்தார். 3 திருமணங்கள் செய்த நிலையில் அவர் தனது மகள் ஜோவிகாவுடன் இருந்து வருகிறார். ஜோவிகா தயாரிப்பால் வனிதா விஜயகுமார் மிஸஸ் அண்ட் மிஸ்டர் ஒரு படத்தை கடந்தாண்டில் டைரக்ட் செய்திருந்தார்.
கடந்த 1999ம் ஆண்டில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் படையப்பா. கேஎஸ் ரவிக்குமார் டைரக்ட் செய்திருந்தார். இதில் ரஜினிக்கு இணையான ஒரு மிரட்டலான வில்லி கேரக்டரில் நீலாம்பரியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். மேலும் சௌந்தர்யா லட்சுமி ராதாரவி மணிவண்ணன் செந்தில் நாசர் அப்பாஸ் என பலர் படையப்பா படத்தில் நடித்திருந்தனர்.
படையப்பா படத்தில் 2ம் பாதியில் ரஜினியின் 2 மகள்களில் ஒருவராக ப்ரீத்தா விஜயகுமார் நடித்திருந்தார். ஆனால் முதலில் இந்த மகள் கேரக்டரில் நடிக்க இருந்தது நடிகை வனிதா விஜயகுமார் தான். சமீபத்தில் நடிகை வனிதா விஜயகுமார் இதுகுறித்து ஒரு நேர்காணலில் கூறியதாவது, படையப்பா படத்தில் முதலில் ரஜினியின் மகளாக நடிக்க இருந்தது நான்தான். என்னை தான் அதில் நடிக்குமாறு கேட்டார்கள். ஆனால் நான் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டேன்.
அதற்கு பின்புதான் என் தங்கை ப்ரீத்தாவுக்கு அந்த கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவள்தான் ரஜினிக்கு மகளாக நடித்து இருந்தாள். படையப்பா படத்தின் கதையை கேட்டபோது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ரஜினிக்கு ஜோடியாக கதாநாயகி ரோலில் நடிக்க கூப்பிட்டிருந்தால் ஒருவேளை நான் நடித்திருப்பேன் என்று வனிதா விஜயகுமார் கூறியிருக்கிறார்.





