- Advertisement -
Homeபொழுதுபோக்குகோவா என்றவுடன் துள்ளிக் குதித்து கிளம்பிய நடிகர்கள், மொக்கை வாங்கி திரும்பிய பரிதாபம் - இந்த...

கோவா என்றவுடன் துள்ளிக் குதித்து கிளம்பிய நடிகர்கள், மொக்கை வாங்கி திரும்பிய பரிதாபம் – இந்த அவமானம் நமக்கு தேவையா என வடிவேலு பாணியில் புலம்பல்

- Advertisement -

நடிகர், நடிகைகளுக்கு விருது என்றாலே பெரிய சந்தோஷம்தான். அந்த விருதுக்கான மரியாதை, மதிப்பை காட்டிலும் அந்த விருதை வாங்கி இருக்கிறேன் என்ற பெருமையே அவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது. ஆனால், சமீபத்தில் தமிழ் சினிமா நடிகர், நடிகையர் விருது வாங்க போய் அவமானப்பட்ட கதை தான் நடந்திருக்கிறது.

நீண்ட ஆண்டுகளாக தெலுங்கு நடிகர் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியிடம் பிஆர்ஓ வாக இருந்தவர் சந்தோஷம் சுரேஷ். இவர் சமீபத்தில் ஒரு தகவல் வெளியிட்டு இருக்கிறார். அதாவது தமிழ், தெலுங்கு, கன்னடம் சினிமா நடிகர், நடிகைகளுக்கு கோவாவில் சந்தோஷம் விருது வழங்க இருப்பதாக அறிவித்து, அழைப்பு விடுத்துள்ளார்.

இதையடுத்து நடிகர் பார்த்திபன், ரோபோ சங்கர், நடிகைகள் ரோகிணி, வனிதா விஜயகுமார் உள்ளிட்ட 30 பேர், சமீபத்தில் கோவாவுக்கு விருது பெற ஆர்வமாக விமானத்தில் புறப்பட்டுச் சென்றனர். ஆனால் அங்கு ஏர்ப்போர்ட்டில் இவர்களை வரவேற்கவும், அழைத்துச் செல்லவும் ஆளில்லை. வாகன ஏற்பாடும் செய்யவில்லை.

ஏர்ப்போர்ட்டில் காத்திருந்து ஏமாற்றமடைந்த அவர்கள், பிறகு குறிப்பிட்ட ஓட்டலுக்கு சென்று ரிசப்ஷனில் விசாரித்த போது அவர்களுக்கு அங்கு ரூம்களும் ஒதுக்கப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால் பயங்கரமாக குழப்பமடைந்துள்ளனர்.

இதையடுத்து அந்த விருது விழாவுக்கு அழைத்த சந்தோஷம் சுரேஷ் என்பவரை அழைத்து கேட்ட போது, நான் எல்லா ஏற்பாடுகளையும் நல்ல விதமாக செய்தேன். ஆனால், எல்லோரும் என்னை ஏமாற்றி விட்டனர். என்னால், இப்போது எதுவுமே செய்ய முடியாது என ஒட்டுமொத்தமாக கைவிரித்து விட்டார்.

விருது வாங்க வந்து இப்படி மொக்கை வாங்கி விட்டோமா, சிரஞ்சீவி பெரிய நடிகர், அவரது பிஆர்ஓ என்று நம்பி வந்து இப்படி மோசம் போய்விட்டோமா என கோவாவில் நொந்துபோய் நின்றுள்ளனர். கோவாவில் விருது வழங்கும் விழா என்பதால், ஓசியில் கொண்டாட்டம் போடலாம் என சென்ற அவர்களுக்கு பெருத்த ஏமாற்றமும், அவமானமும் ஏற்பட்டுள்ளது. பிறகு சொந்த காசை செலவழித்து ஊர்வந்து சேர்ந்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவென்றால், சந்தோஷ் சுரேஷ் என்பவர் எங்களது பிஆர்ஓ வே இல்லை என, ஆந்திராவில் சிரஞ்சீவி தரப்பில் அறிக்கையே வெளியிட்டுள்ளார்கள்.

சற்று முன்