- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த உலகமே எனக்கு எதிரானது என நினைத்தேன், 100 கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த பக்கம்...

இந்த உலகமே எனக்கு எதிரானது என நினைத்தேன், 100 கோடி ரூபாய் கொடுத்தாலும் அந்த பக்கம் வர மாட்டேன் – நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தந்த ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. தமிழிலும் தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அவர் உருவாக்கியுள்ளார். எந்த கேரக்டர் என்றாலும் அதில் தனது நடிப்பை மிக நேர்த்தியாக அழுத்தமாக அவர் வெளிப்படுத்தி ரசிகர்களின் மனங்களில் இடம் பிடிக்கிார்.

தமிழில் நடிகர் தனுஷூடன் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ஜகமே தந்திரம் விஷ்ணு விஷாலுடன் அவர் நடித்த கட்டா குஸ்தி இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் நடிகர் சூரி நடித்த மாமன் படத்தில் அவருக்கு ஜோடியாகவும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் கட்டா குஸ்தி படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுடன் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தின் முதல் பாகம் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து தற்போது கட்டா குஸ்தி 2 திரைப்படமும் திரையரங்குகளில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையே கடந்த ஆண்டு முகநூல் டிவிட்டர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களில் இருந்தும் விலகிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி அப்போது எடுக்கப்பட்ட இந்த முடிவு தனக்கு மிகவும் மன அமைதியை தந்துள்ளதாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். பல சினிமா கலைஞர்கள் சமூக வலைதள பயன்பாட்டில் இருந்து விலகி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதுகுறித்து சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறியதாவது, என்னுடைய புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமான மற்றும் தரக்குறைவான கருத்துக்களை சிலர் பதிவிட்டது என்னை மிகவும் மன வேதனைக்கு உள்ளாக்கியது. ஒரு கட்டத்தில் இந்த உலகமே எனக்கு எதிராக இருப்பது போலவும் அனைவரும் என்னை வெறுப்பது போலவும் உணர்ந்தேன்.

அதனால் தான் நான் சமூக வலைதளங்களில் இருந்து முற்றிலுமாக விலகி வெளியே வந்து விட்டேன். மேலும் என்னுடைய இந்த முடிவில் எந்த மாற்றமும் இருக்காது. யாராவது எனக்கு 100 கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் சமூக வலைதளங்களின் பக்கம் நான் திரும்ப வர மாட்டேன். இப்போது ஆன்லைனில் பழகுவதைவிட மக்களை நேரில் சந்தித்து பழகுவதையே நான் அதிகம் விரும்புகிறேன் என்று நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்