சிவகார்த்திகேயன் தற்போது ஏ ஆர் முருகதாஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சென்னையை மையமாக வைத்து இதன் சூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்திற்காக அடர்ந்த தாடியுடன் சிவகார்த்திகேயன் காட்சி இருக்கிறார். இதில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் நடித்துள்ளார்.
தெலுங்கின் முன்னணி நிறுவனமான ஸ்ரீ லட்சுமி மேக்கர்ஸ் இந்தப் படத்தை எடுத்து வருகிறது. அனிருத் படத்திற்கு இசையமைத்து வருகிறார். சிவகார்த்திகேயனின் 23வது திரைப்படமாக இது உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் 60% பணிகளை தற்போது ஏ ஆர் முருகதாஸ் முடித்திருக்கிறார்.
படத்தில் சிவகார்த்திகேயன் இளைஞர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. உளவியல் ரீதியான பிரச்சனையால் அவர் சிரமப்படும் கதாபாத்திரம் என்றும், அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வந்து எதிரிகளை அழிக்கிறார் என்பதுதான் இதன் ஒற்றை வரி என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த கதை, சூர்யாவின் கஜினி படத்தை ஞாபகப்படுத்துவதாக பலர் கூறி வருகின்றனர்.
இந்த திரைப்படத்தில் மலையாள நடிகர் பிஜு மேனன் நடித்து வருகிறார். இதேபோல் பாலிவுட் நடிகர் வித்யூத் ஜமாலும் எஸ் கே 23 திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளார். இவர் துப்பாக்கி திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார். இதன் பிறகு மீண்டும் ஏ ஆர் முருகதாஸ் கதையில் அவர் இணைந்திருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபலம் படத்தில் இணைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அவர் வேறு யாரும் இல்லை நடிகர் விக்ராந்த் தான். அவருக்கு இந்த திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. விக்ராந்த் அண்மையில் வெளியான லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
ஏற்கனவே விஷாலின் பாண்டியநாடு திரைப்படத்திலும் அவர் கெஸ்ட் ரோல் பண்ணி இருந்தார். இந்தத் திரைப்படத்திலும் அது போன்ற கதாபாத்திரம்தான் என்று கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது அமரன் திரைப்படம் உருவாகி இருக்கிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசன் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.





