- Advertisement -
Homeபொழுதுபோக்குஆண்டுக்கு 2 கோடி ரூபாய் சம்பளத்தை அள்ளித் தரும் நடிகை ஐஸ்வர்யா ராய் - ...

ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் சம்பளத்தை அள்ளித் தரும் நடிகை ஐஸ்வர்யா ராய் – அந்த அதிர்ஷ்டசாலிகள் யார் தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் ஐஸ்வர்யா ராய். பாலிவுட் சீனியர் நடிகர் அமிதாப் பச்சனின் மருகமள், நடிகர் அபிஷேக் பச்சனின் மனைவி. இவர்களுக்கு ஆராதனா என்ற மகளும் இருக்கிறார். தமிழ் இந்தி மற்றும் தெலுங்கில் நிறைய படங்களில் ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கிறார்.

தமிழில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் படத்தில் நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக முதன் முதலில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். இந்த படத்தில் அவரது அழகும் நடிப்பும் நடனமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. முதல் படத்திலேயே ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்தார்.

- Advertisement -

தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் இருவர் இராவணன் பொன்னியின் செல்வன் 1 பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்களிலும்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ரஜினியுடன் எந்திரன் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கேரக்டரில் ஐஸ்வர்யா ராய் நடிப்பு பெரிய பாராட்டை பெற்றது.

வழக்கமான தமிழ் தெலுங்கு இந்தி மொழி சினிமாவில் பிரபல நடிகர் நடிகைகளாக உள்ளவர்கள் பொது இடங்களுக்கு வரும்போதும் ஷூட்டிங் ஸ்பாட் மற்றும் சினிமா விருது வழங்கும் விழா்ககள் போன்றவற்றுக்கு வரும்போதும் அவர்களுக்கு பவுன்சர்கள் பாதுகாப்பாக வருவது வழக்கமாக உள்ளது.

- Advertisement -

இந்தி நடிகர் சல்மான் கானுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர 72 பேர் கொண்ட பாதுகாப்பு படை அவருக்கு எப்போதும் துணையாக பாதுகாப்பு வளையமாக இருந்து வருகிறது. அரசியல் தலைவராக மாறியுள்ள நடிகர் விஜய்க்கு, மத்திய அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு சமீபத்தில் வழங்கியது.

அதுபோல் நடிகை ஐஸ்வர்யா ராய், தனது பாதுகாப்புக்கு என இரண்டு செக்யூரிட்டிகளை நியமனம் செய்திருக்கிறார். படப்பிடிப்பு தளங்களுக்கு மட்டுமின்றி நடிகை ஐஸ்வர்யா ராய் எங்கு சென்றாலும் அவர்கள் இருவரும் அவரது நிழல் போல பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் துணையால் ரசிகர்கள் தொல்லையின்றி ஐஸ்வர்யா ராய் நிம்மதியாக சென்று வருகிறார். இதற்காக அவர்களுக்கு தலா ரூ. 1 கோடி வீதம் இரண்டு பாதுகாவலர்களுக்கும் ஆண்டுக்கு ரூ. 2 கோடி சம்பளமாக தந்து வருகிறார்.

- Advertisement -

சற்று முன்