- Advertisement -
Homeபொழுதுபோக்குஅது எம்ஜிஆர் ஐயா கொடுத்த ஐடியா தான், அதை பார்த்த போது எனக்கு தலையே சுத்தி...

அது எம்ஜிஆர் ஐயா கொடுத்த ஐடியா தான், அதை பார்த்த போது எனக்கு தலையே சுத்தி விட்டது – கண்ணீர் மல்க பேசிய நடிகை அம்பிகா!

- Advertisement -

சில தினங்களுக்கு முன்பு நடிகை ராதா, சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனது அக்கா நடிகை அம்பிகா, சகோதரர் மல்லிகார்ஜூனா குஞ்சன் ஆகியோர் மீது புகார் அளித்தார். அதில், என்னுடைய கையெழுத்திட்ட செக்குகளை திருடி 46 கோடி ரூபாய் எனது வங்கி கணக்கில் எடுக்க அவர்கள் முயற்சித்ததாக புகாரில் கூறியிருந்தார்.

வங்கியில் இருந்து அலர்ட் மெசேஜ் வந்ததால் அந்த செக்குகளை ஸ்டாப் செய்துவிட்டதாகவும் ராதா கூறியிருந்தார். இந்த நிலையில் நடிகை அம்பிகாவுக்கு சேர வேண்டிய ஏஆர்எஸ் கார்டன் பங்குகளை சரிவர தராமல் அவரது நகைகளையும் ராதா அபகரித்துக்கொண்டதாக, அம்பிகா அதற்கு விளக்கம் தந்துள்ளார்.

- Advertisement -

மேலும் இன்னும் சொல்ல வேண்டுமென்றால் என்னை 97 கோடி ரூபாய் வரை ராதா ஏமாற்றியிருக்கிறார். நான் உண்மையை சொன்னால் ராதா தான் ஜெயிலுக்கு போக வேண்டும் என்றும் நடிகை அம்பிகா கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ஏஆர்எஸ் கார்டன் எங்களது சொந்த உழைப்பில் வாங்கியது, எம்ஜிஆர் எங்களுக்கு கொடுத்தது அல்ல என்றும் அம்பிகா கூறியிருந்தார்.

மேலும் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை அம்பிகா கூறியதாவது, ஏஆர்எஸ் கார்டன் என்றால் என்னவென்று எல்லோருக்கும் தெரியம். அம்பிகா ராதா சரசம்மா என்ற பெயர்களின் முதல் ஆங்கில எழுத்துகள்தான் ஏஆர்எஸ் கார்டன் என வைக்கப்பட்டுள்ளது. ஏஆர்எஸ் கார்டன் ஓபனிங் டைம்ல எம்ஜிஆர் ஐயாவை பார்க்க போன போது அதுக்கு ஒரு பேர் வைக்கணும்.

- Advertisement -

எம்ஜிஆர் ஐயா பேரோ இல்லே ஜானகி அம்மா பேரோ வைக்கலாம்ன்னு சொன்ன போது உங்க 3 பேரோட பெயர்களை சேர்த்து போடுங்களேன் என்று ஐடியா கொடுத்ததே எம்ஜிஆர் ஐயா தான். ஏஆர்எஸ் கார்டன் திறப்பு விழாவுக்கு எம்ஜிஆர் ஐயாவை கூப்பிடும் போது ரொம்ப பெருமையா, கஷ்டப்பட்டு சம்பாதிச்சது அந்த ஏஆர்எஸ் கார்டனோட மூல காரணம் அது என்னோட குழந்தை தான் என்று இப்பவும் நான் ஃபீல் பண்ணிட்டு இருக்கேன்.

கொஞ்ச நாளைக்கு முன்னாடி நான் அங்கே போனபோது ஏஆர் கார்டன் அங்கே அந்த பேரை காணோம். வேற ஒரு போர்டு இருந்தது. எனக்கு ஒரு ரெண்டு மூணு நிமிஷம் நான் எங்கே இருக்கேன் அப்படீங்கறதே தெரியலே. தலை எல்லாம் சுத்திடுச்சு. கண்ணெல்லாம் வேற மாதிரி போயிடுச்சு. எனக்கு பேனிக் அட்டாக் மாதிரி வந்துடுச்சு என்று அந்த பிரஸ்மீட்டில் செய்தியாளர்களிடம் அம்பிகா கூறினார்.

- Advertisement -

சற்று முன்