- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்தில் நடிகர் சந்தானம் நடந்துக்கொண்ட விதம் எனக்கு பிடிக்கவில்லை; மிகவும் வருத்தப்பட்டேன் - நடிகை...

அந்த விஷயத்தில் நடிகர் சந்தானம் நடந்துக்கொண்ட விதம் எனக்கு பிடிக்கவில்லை; மிகவும் வருத்தப்பட்டேன் – நடிகை தேவயானி ஆதங்கம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் குடும்பப்பாங்கான நடிகை என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகை தேவயானி. கடந்த 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அஜீத்குமார் விஜய் விக்ரம் சரத்குமார் சத்யராஜ் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு பல படங்களில் ஜோடியாக நடித்தவர்.

குறிப்பாக காதல் கோட்டை பிரண்ட்ஸ் விண்ணுக்கும் மண்ணுக்கும் நீ வருவாய் என சூரியவம்சம் தென்காசிப்பட்டணம் பாட்டாளி போன்ற பல படங்களில் தேவயானி நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தேவயானியின் தம்பி நகுலும் ஒரு திரைப்பட நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் ராஜகுமாரனை நடிகை தேவயானி காதல் திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். ராஜகுமாரன் ஆரம்பத்தில் இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக இருந்தவர். பிறகு தேவயானி நடித்த நீ வருவாய் என மற்றும் விண்ணுக்கும் மண்ணுக்கும் படங்களை இயக்கிய காலகட்டத்தில் தேவயானியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

இயக்குனர் ராஜகுமாரன், நடிகர் சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் காமெடி கேரக்டரில் நடித்திருந்தார். ரயிலில் சந்தானம் கதாநாயகியுடன் வரும்போது, அதே பெட்டியில் பயணிக்கும் ராஜகுமாரனும் அவர்களது நண்பர்களும் சந்தானத்தை கிண்டல் செய்ய பதிலுக்கு அவர்களை குறிப்பாக ராஜகுமாரனை சந்தானம் கலாய்த்து விடுவார். இது பயங்கர காமெடியாக இருக்கும்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகை தேவயானி இதுகுறித்து மிகவும் வருத்தப்பட்டு பேசியிருக்கிறார். நடிகை தேவயானி கூறியதாவது, எனது கணவரை சந்தானம் கலாய்த்தது எனக்கு பிடிக்கவில்லை. மிகவும் வருத்தமாக இருந்தது. சந்தானம் கலாய்த்ததை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அது எனக்கு பிடிக்கவில்லை. எனக்கு அந்த விஷயமே பிடிக்கவில்லை.

எனது கணவர் ஏன் இந்த கேரக்டரில் நடித்தார் என்று கூட எனக்கு தெரியவில்லை. சந்தானம் படத்தில் நடிக்கிறார் என்று மட்டும்தான் தெரியும். ஆனால் இதுபோன்ற கதாபாத்திரம் என்று எனக்கு தெரியாது. எனது கணவர் அதை ஏற்று நடித்துள்ளார் ஆனால் எனக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை. என் கணவரை சந்தானம் கலாய்த்தது எனக்கு மிகவும் வருத்தத்தை தந்தது என்று நடிகை தேவயானி அந்த நேர்காணலில் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

சற்று முன்