- Advertisement -
Homeபொழுதுபோக்குதிருமதி செல்வம் சீரியல் நடிகர் ஜெயமணி மறைவு - பூங்காவனம் கேரக்டரில் மக்களின் மனங்களை வென்ற...

திருமதி செல்வம் சீரியல் நடிகர் ஜெயமணி மறைவு – பூங்காவனம் கேரக்டரில் மக்களின் மனங்களை வென்ற அவரது ஆசை கடைசி வரை நிறைவேறலையே?

- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் சீரியல் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. சஞ்சீவ் – அபிதா இதில் பிரதான கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த சீரியலில் பூங்காவனம் என்ற கேரக்டரில் நடித்த நடிகர் ஜெயமணி, 79வது வயதில் நேற்று சென்னையில் காலமானார். சிறகடிக்க ஆசை சீரியலிலும் நடித்து பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் ஜெயமணி கூறியதாவது, எனக்கு 7 வயதில் இருந்தே சினிமா மீது ஆசை. என்னுடைய மாமா பாடகர். அவரைப் பார்த்துதான் நாடகத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்தது. ஆனால் அந்த கனவு உடனே நனவாகவில்லை. காலேஜில் படித்து முடித்த பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக கவர்மெண்ட் ஆபீசில் வேலைக்கு சேர்ந்தேன்.

- Advertisement -

வாழ்க்கைக்காக அரசு வேலையை தேர்வு செய்திருந்தாலும் மனதில் இருந்த நடிகர் ஆசை மட்டும் போகவில்லை. வேலை முடிந்த பிறகு நாடகம் அதற்குப் பிறகு நாடகத்திலிருந்து சினிமா அதிலிருந்து சின்னத்திரை என்று வாய்ப்பு கிடைத்த நேரம் எல்லாம் நடித்துக்கொண்டு இருந்தேன். எனக்கு தெரிந்தது சினிமா தான்.

என் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது திருமதி செல்வம் சீரியல் தான். என்னால் முடிந்த அளவுக்கு நடிப்பை முழுமையாக கொடுக்க வேண்டும் என்று நினைத்து தான் பூங்காவனம் கேரக்டரில் நடித்தேன். அந்த கேரக்டர் ஜெயமணி என்ற பெயரை விட மக்கள் மனதில் பூங்காவனம் என்று பதிய வைத்தது. சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்த பிறகு மலேசியா மாமா என்று என்னை கூப்பிடறாங்க.

- Advertisement -

அரசு வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்த ஆரம்ப நாட்களில் படப்பிடிப்பில் சாப்பாட்டு தட்டை எடுத்துக் கொண்டு நின்ற போது நீ அங்கே போய் சாப்பிடு என்ற தட்டை பிடித்து அவமானப்படுத்தி இருக்கிறார்கள். அந்த அவமானத்தையும் கடந்தும் ஜெயித்திருக்கிறார். 250க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் பல சீரியல்களையும் ஜெயமணிநடித்திருக்கிறார்.

இதுவரை அவர் 40 சீரியல்களை டைரக்ட் செய்து இருக்கிறார். டிவி சீரியலில் நடிப்பவர்களை சினிமாவுக்கு செலக்ட் பண்ண கூடாது என்ற தவறான எண்ணம் இருக்கிறது. அது மாற வேண்டும். மேலும் படங்கள் இயக்க வேண்டும். அவர் எழுதி வைத்த கதையை திரைக்கு கொண்டு வர வேண்டும். புதிய வாய்ப்புகள் வரவேண்டும் என்று ஜெயமணி கனவு கண்ட நிலையில் கடைசி வரை அந்த கனவுகள் நடிகர் ஜெயமணிக்கு நிறைவேறவில்லை.

- Advertisement -

சற்று முன்