- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் மோகன்லாலை அப்படி ஒரு நடிகராக நான் பார்த்தது இல்லை - திரிஷ்யம் பட...

நடிகர் மோகன்லாலை அப்படி ஒரு நடிகராக நான் பார்த்தது இல்லை – திரிஷ்யம் பட நடிகை எஸ்தர் அனில் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

மலையாள சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வருபவர் மோகன்லால். மலையாளத்தில் கடந்த 2013ம் ஆண்டில் வெளியான திரிஷ்யம் முதல் பாகம் மற்றும் 2021ம் ஆண்டில் வெளியான திருஷ்யம் 2ம் பாகம் என்ற இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.

இந்த படங்களில் நடிகர் மோகன்லாலின் இளைய மகளாக நடித்தவர் எஸ்தர் அனில், திரிஷ்யம் முதல் பாகத்தில் நடிக்கும் போது 11 வயது சிறுமியாக இருந்த அவர் இப்போது 24 வயது இளம் குமரியாக மாறியிருக்கிறார். இந்நிலையில் விரைவில் ரிலீசாக இருக்கும் திரிஷ்யம் மூன்றாம் பாகத்திலும் எஸ்தர் அனில் நடித்துள்ளார்.

- Advertisement -

மேலும் மலையாளத்தில் பெரிய வெற்றி பெற்ற திரிஷ்யம் முதல் பாகம் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்ட போது பாபநாசம் என்ற பெயரில் வெளியானது. இந்த படத்தில் மோகன்லால் மீனா கேரக்டர்களில் நடிகர் கமல்ஹாசன் கௌதமி நடிப்பில் உருவானது. இந்த படத்திலும் கமலின் இளைய மகளாக எஸ்தர் அனில் சிறுமியாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரிஷ்யம் திரிஷ்யம் 2 திரிஷ்யம் 3 ஆகிய படங்களில் மோகன்லாலுடன் நடித்த போது மோகன்லாலிடம் இருந்து தான் கற்றுக் கொண்ட இரண்டு முக்கியமான விஷயங்கள் குறித்து எஸ்தர் அனில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற எஸ்தர் அனில் கூறியதாவது, ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு குழந்தைத்தனம் எப்போதுமே இருக்கிறது. அது எப்போதும் மறைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இதைத்தான் அவரை கவனித்த வகையில் மோகன்லாலிடம் இருந்து நான் முதல் படிப்பினையாக எடுத்துக் கொண்டேன். அடுத்ததாக விஷயங்கள் நடக்கிற படி நடக்கட்டும். எதையும் இறுக்கமாக பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்காதே என்பதுதான் அவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட இன்னொரு விஷயம். நடிகர் மோகன்லாலை பொறுத்தவரை அவர் எப்போதுமே கவலையை வெளிப்படுத்த மாட்டார்.

இன்று தன்னைப் பற்றி என்ன எழுதியிருக்கிறார்கள்? நாளை என்ன எழுதப்போகிறார்கள்? இன்று நல்ல நாளாக இருந்ததா? இல்லை மோசமாக அமைந்ததா என்று எதையுமே அவர் பொருட்படுத்த மாட்டார். இப்படி கவலைப்படும் நபராக நான் பார்த்தவரை அவர் தெரியவில்லை. அவரிடமிருந்து அந்த விஷயத்தையும் நான் எடுத்துக் கொண்டு பின்பற்றி வருகிறேன் என்று நடிகை எஸ்தர் அனில் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்