- Advertisement -
Homeபொழுதுபோக்குவேலியே பயிரை மேய்ந்த கதை, பாஜகவில் இருந்து விலகியதாக அறிவித்த பிரபல நடிகை

வேலியே பயிரை மேய்ந்த கதை, பாஜகவில் இருந்து விலகியதாக அறிவித்த பிரபல நடிகை

- Advertisement -

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சில நடிகர், நடிகையர் ஒரு கட்டத்துக்கு பிறகு முக்கிய நடிகர், நடிகையாக மாறி முன்னணி நிலைக்கு உயர்ந்து விடுகின்றனர். நல்ல நல்ல படங்களில் தொடர்ந்து நடிக்கும் போது, மக்கள் மத்தியில் பெரிய பிரபலமடைகின்றனர். சமூகத்தில், மதிக்கப்படும் உயர்ந்த இடத்தை அடைகின்றனர்.

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்துக்கு பிறகு மார்க்கெட் இழக்கும் அவர்கள், மற்ற மொழி படங்களில் நடிக்கின்றனர். அல்லது, டிவி சீரியல் பக்கம் செல்கின்றனர். மற்றொரு தரப்பினர், அரசியல் பக்கம் செல்கின்றனர். ஏனெனில், காலம் முழுவதும் மக்கள் செல்வாக்கில் இருக்க, அரசியலை தேர்வு செய்கின்றனர்.

- Advertisement -

அப்படி தமிழ் சினிமாவில் இருந்து, அரசியலுக்கு சென்றவர்தான் கவுதமி. தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், சத்யராஜ், பிரபு, கார்த்திக் என கடந்த 1990களில் மிகவும் பிஸியாக நடித்துக்கொண்டு இருந்தவர் கவுதமி. இப்போதும் தமிழ் சினிமாவில் அவ்வப்போது நடிக்கிறார். பாபநாசம் படத்தில், கமலுக்கு மனைவியாக கவுதமி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கவுதமி, நடிகர் கமல் படங்களில் அதிகமாக நடித்திருக்கிறார். சினிமா வாழ்க்கையில் மட்டுமின்றி, நிஜ வாழ்க்கையிலும் அவர்கள் பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர்.

- Advertisement -

இதற்கிடையே பாஜகவில் இணைந்த கவுதமி, அரசியலில் ஆர்வமாக ஈடுபட்டு வந்தார். கட்சி பொதுக்கூட்டங்கள், நிர்வாகிகள் கூட்டத்திலும் கலந்துக்கொண்டார். சமீபத்தில், திருவண்ணாமலையில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தை, பாஜக சார்ந்த முக்கிய நிர்வாகி அழகப்பன் ஏமாற்றி அபகரித்து விட்டதாக கமிஷனர் அலுவலகத்தில் கவுதமி புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, இன்று எக்ஸ் (டிவிட்டர்) பக்கத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள நடிகை கவுதமி, பாஜக கட்சியில் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். தனது விலகல் குறித்து, பாஜக தலைமைக்கும் அறிவித்து ராஜினாமா கடிதம் எழுதிவிட்டதாக கவுதமி அதில் தெரிவித்துள்ளார். தான் சார்ந்துள்ள கட்சியில் இருந்த நிர்வாகியே, தனது சொத்துகளை அபகரித்ததால் விரக்தியில், இந்த முடிவை கவுதமி எடுத்ததாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்