- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய்யின் நான் ரெடி தான் வரவா பாடலுக்கு ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ள பிரபல கிரிக்கெட் வீரர்.

விஜய்யின் நான் ரெடி தான் வரவா பாடலுக்கு ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ள பிரபல கிரிக்கெட் வீரர்.

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள லியோ படம் குறித்த ஏதாவது ஒரு தகவல் தான் இணையத்தில் தினம் தினம் வந்து கொண்டிருக்கிறது. மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் மற்றும் விஜய் இணையும் இந்த படமானது மிகப்பெரிய பிரம்மாண்டமான ஒரு வசூல் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவை பொருத்தவரை ஆயிரம் கோடி என்ற மைல் கல்லை இந்த படம் நிச்சயம் தொடும் என்று திரைத்துறையை சார்ந்த பலரும் எதிர்பார்க்கின்றனர். அதேபோல படம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை அந்த படத்திற்கான பிரமோஷன் ஏதோ ஒரு வகையில் செய்யப்பட்டு கொண்டே தான் இருக்கிறது.

- Advertisement -

உதாரணமாக படக்குழு காஷ்மீர் சென்றபோது விமானத்தில் விஜய் எடுத்த வீடியோவாகட்டும், காஷ்மீர் படப்பிடிப்பு முடிந்ததும் படக்குழு வெளியிட்ட வீடியோவாகட்டும், இப்படி எக்கச்சக்கமான பிரமோஷன் பெரிதாக பணம் செலவில்லாமல் செய்யப்படுகிறது.

அதோடு விஜய் என்ற ஒற்றை மனிதரின் கிரேஸ் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் லியோ படத்தின் பக்கம் திரும்பி பார்கவைத்துள்ளது. சமீபத்தில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அந்த படத்தின் முதல் சிங்கிளான நான் ரெடி தான் வரவா என்ற பாடல் வெளியானது.

- Advertisement -

பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே வேகமாக பகிரப்பட்டு தற்போது பட்டிதொட்டி எங்கும் ஹிட்டு அடித்து வருகிறது. பாடல் ஒரு புறம் ஹிட் ஆனாலும் பாடல் குறித்த பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருந்தன. விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் அந்த பாடலில் இடம்பெற்றுள்ளதால் பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஏனென்றால் விஜய்க்கு குழந்தை ரசிகர்கள் பலர் இருப்பதால் அவர்கள் இதை காண்பதால் அவர்கள் மனதில் ஏதேனும் சஞ்சலங்கள் ஏற்படக்கூடும் என்ற வகையில் தான் அந்த எதிர்ப்புகள் எல்லாம் இருந்தன. இந்த நிலையில் லியோ படத்தின் அந்த பாடலை பலரும் ரிலீஸ் செய்து தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான ஷிகர் தவான் நான் ரெடி தான் வரவா பாடலுக்கு ரிலீஸ் செய்து பதிவிட்டுள்ளார். அதன் காரணமாக அந்த பாடல் இந்தியா முழுக்க பரவி உள்ளது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு முன்பு பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ஹலமதி என்ற பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த பாடலும் பலராலும் ரீல் செய்யப்பட்டு instagramல் பதிவிடப்பட்டிருந்தது. இந்த வகையில் தற்போது நான் ரெடி தான் பாடலும் இடம் பெற்றுள்ளது.

- Advertisement -

சற்று முன்