- Advertisement -
Homeபொழுதுபோக்குமனைவியிடம் சபதம் எடுத்தாரா மாரி செல்வராஜ்... அதுவும் இப்படி ஒரு திரைப்படத்தை இயக்குவதற்காகவா... நம்பவே முடியலையேப்பா....

மனைவியிடம் சபதம் எடுத்தாரா மாரி செல்வராஜ்… அதுவும் இப்படி ஒரு திரைப்படத்தை இயக்குவதற்காகவா… நம்பவே முடியலையேப்பா….

- Advertisement -

இயக்குனர் மாரி செல்வராஜுக்கு கடந்த ஆண்டு வாழை திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அவரது இயக்கத்தில் இது நான்காவது படமாக அமைந்தது. இதற்கு முன்னதாக பரியேறும் பெருமாள், கர்ணன் மற்றும் மாமன்னன் ஆகிய திரைப்படங்களை அவர் இயக்கி இருந்தார்.

 

- Advertisement -

இதன்பிறகு அவர் வாழை திரைப்படத்தை நேரடியாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாவதாக தான் இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் படம் நேரடியாக திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனை மாரி செல்வராஜே தயாரித்தும் இருந்தார். இதன் சிறப்பு காட்சியின் போதே படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

 

- Advertisement -

குறிப்பாக படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் பாலா, மாரி செல்வராஜின் கரங்களைப் பிடித்து சில நிமிடங்கள் அமைதியாக இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக வாழை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

 

வாழைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் மாரி செல்வராஜ். 1999 ஆம் ஆண்டு நிகழ்ந்த விபத்தின் காட்சிகளை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் வாழை திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. ஆனால், ஓடிடியில் வெளியாகும் போது வாழை திரைப்படம் குறித்து விமர்சனங்கள் எழுந்தன.

 

இப்படியான சூழலில் தற்போது விக்ரம் மகன் துருவ் விக்ரமை வைத்து பைசன் திரைப்படத்தை அவர் இயக்கி வருகிறார். கபடி விளையாட்டை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இதனை படமாக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் பல்வேறு விஷயங்களை அவர் பகிர்ந்து இருக்கிறார்.

 

அதில், எனக்கு காதல் திரைப்படம் எடுக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. ஒருமுறை விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் போன்று ஒரு காதல் திரைப்படத்தை இயக்க வேண்டும் என எனது மனைவி என்னிடம் கூறியிருந்தார். நிச்சயம் எந்த ஒரு சமூக பிரச்சனையும் இல்லாமல் ஒரு காதல் திரைப்படத்தை நான் எடுத்துக்காட்டுவேன் என்று மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்