- Advertisement -
Homeபொழுதுபோக்குஎத்தனை மணி நேரம் வேலை என்றாலும், மறுக்காமல் செய்வதுதான் நம்முடைய கடமை - பாலிவுட்...

எத்தனை மணி நேரம் வேலை என்றாலும், மறுக்காமல் செய்வதுதான் நம்முடைய கடமை – பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவை வம்புக்கு இழுத்த விஜய் பட நடிகை!

- Advertisement -

ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் ஜெனிலியா. முதல் படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அடுத்து நடிகர் விஜயுடன் சச்சின் படத்தில் நடித்தார். பிறகு ஜெயம் ரவியுடன் சந்தோஷ் சுப்ரமணியம் படத்திலும் இவரது நடிப்பு பெரிய வரவேற்பை பெற்றது. பாலிவுட் நடிகை தீபிகா படுகோனை, நடிகை ஜெனிலியா மறைமுகமாக தாக்கி பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படம் ஸ்பிரிட். இந்த படத்தில் நாயகியாக நடிப்பதற்கு முதலில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கமிட்டாகி இருந்தார். ஆனால் அதன் பிறகு அவர் அந்த படத்தில் இருந்து திடீரென விலகினார். அவருக்கு பதிலாக நடிகை திரிப்தி டிம்ரி இந்த படத்தில் நடிக்கிறார். தீபிகா படுகோனே இந்த படத்தில் இருந்து விலகியதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது.

- Advertisement -

குறிப்பாக தீபிகா படுகோனே தன்னுடைய குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால், ஒரு நாளைக்கு 8 மணி நேரமாக தனது பணி நேரத்தை குறைத்துக் கொள்ள படக்குழுவுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த பணி நேரம் தொடர்பான பேச்சு வார்த்தையில், தீபிகா படுகோனே கேட்டபடி சரியாக வராததால் அவர் ஸ்பிரிட் படத்தில் இருந்து விலகினார் என்று கூறப்பட்டது.
இது பாலிவுட் சினிமாத்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் இயக்குனர் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் நடிகர் அமீர்கான் நடிகர் ஜெனிலியா தேஷ்முக் நடிப்பில் சிதாரே ஜமீன் பர் என்கிற படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஜெனிலியா பேசியதாவது, 10 மணி நேர வேலை என்பது கடினம்தான். ஆனால் அது சாத்தியமற்றது அல்ல.

- Advertisement -

நான் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்கிறேன். இயக்குனர் அதை 11 மணி, 12 மணி நேரமாக நீட்டிக்க சொல்லும் நாள்களும் இருந்திருக்கிறது. ஒரு இயக்குனரின் தேவைக்கு ஏற்றார் போல் வேலை நேரத்தை சில மணி நேரம் அதிகப்படுத்தி கொள்ள கேட்பது நியாயமானது என்று நினைக்கிறேன். ஆனால் அந்த மாற்றங்களை செய்ய நமக்கு நேரம் கிடைக்க வேண்டுமே, அது இல்லாத சூழலால் தான் சிக்கல்கள் ஏற்படுகிறது.

எல்லா நாள்களும் வேலை நேரத்தை விட அதிகமாக வேலை செய்ய வேண்டும் என்று அவசியமில்லை. ஒரு சில நாட்கள் நமக்கு அதிக நேரம் வேலை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டால் செய்துதான் ஆகணும். இது இரு தரப்புக்கு மத்தியில் புரிதலுடன் செய்ய வேண்டிய ஒன்று என்று ஜெனிலியா கூறியிருக்கிறார். மறைமுகமாக அவர் தீபிகா படுகோனே குறித்து தாக்கி பேசியிருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்