இந்தி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா மோத்வானி வளர்ந்த பிறகு ஏராளமான படங்களில் நாயகியாக நடித்தார். தமிழ் இந்தி தெலுங்கு என பல மொழிகளில் ஹன்சிகா மோத்வானி நடித்திருக்கிறார். தமிழில் வேலாயுதம் மாப்பிள்ளை ஒரு கல் ஒரு கண்ணாடி அரண்மனை போகன் என பல படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2022ம் ஆண்டில் சோஹைல் கதூரியா என்ற தொழிலதிபரை ஹன்சிகா மோத்வானி காதல் திருமணம் செய்துக்கொண்டார்.
ஒரு கட்டத்தில் தமிழ் இந்தி என சினிமாவில் போதிய வரவேற்பு இல்லாத நிலையில், அவரது அம்மாவின் அறிவுரைப்படி திருமணம் செய்துகொள்ள ஹன்சிகா மோத்வானி சம்மதித்தார். தனது நீண்ட நாள் நண்பரான சோஹைல் கதூரியாவை என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ராஜஸ்தானில் மிகவும் கோலாகலமாக நடந்தது.
ஆனால் திருமணமாகி 2 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் திடீரென ஹன்சிகா மோத்வானி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த தனது கணவரின் புகைப்படங்களை எல்லாம் டெலிட் செய்திருக்கிறார். இதை கவனித்த நெட்டிசன்கள் இதற்கு என்ன காரணம் என்ற ஆராய்ச்சியில் இறங்கினார். அப்போதுதான் ஹன்சிகா மோத்வானிக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணமான சில மாதங்களிலேயே இருவரும் பிரிந்து விட்டனர். இருவரும் தனித்து வாழ்வது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது, நடிகை ஹன்சிகாவின் கணவர் சோஹைல் கதூரியா ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர். ஹன்சிகாவை அவர் 2வது திருமணம்தான் செய்திருக்கிறார். ஆனால் இது யாருக்குமே தெரியாது. அவர் ஒரு தொழிலதிபர் என்பதாலேயே அவரை ஹன்சிகா திருமணம் செய்திருக்கிறார்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க கூடாது, சீக்கிரம் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என கண்டிஷன்களாக போட்டு அவரது கணவர் ஹன்சிகாவை டார்ச்சர் செய்திருக்கிறார். பொறுத்து பொறுத்து பார்த்த அவர் ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த நடிகை ஹன்சிகா தனது மூட்டை முடிச்சுகளை எல்லாம் கட்டிக்கொண்டு தனது அம்மா வீட்டுக்கு வந்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
அதன்பிறகுதான் இன்னொரு முக்கியமான அதிர்ச்சியான விஷயம் கணவர் வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர் ஒருவர் மூலம் ஹன்சிகாவுக்கு தெரிய வந்துள்ளது. அதாவது ஹன்சிகாவின் கணவருக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாக அந்த வேலைக்காரர் சொல்லி இருக்கிறார். இதையடுத்து நிரந்தரமாகவே தன் கணவரை பிரிந்து விவாகரத்து பெறும் முடிவுக்கு ஹன்சிகா வந்திருக்கிறார் என்று பயில்வான் ரங்கநாதன் அந்த வீடியோவில் கூறியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





