- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் அஜீத்குமாரை போலவே கார் ரேஸர் ஆக இருந்த பிரபல காமெடி நடிகர்… ரயிலையே ...

நடிகர் அஜீத்குமாரை போலவே கார் ரேஸர் ஆக இருந்த பிரபல காமெடி நடிகர்… ரயிலையே முந்திய அவர் வயக்காட்டுக்குள்ள கார் ஓட்டுன கதை தெரியுமா?

- Advertisement -

சினிமா நடிகர்களில் பலருக்கும் கார் மீது அலாதியான பிரியம் இருக்கிறது. பல நடிகர்கள் மார்க்கெட்டில் புதிய லக்ஸரி கார்கள் வந்துவிட்டாலே அவற்றை வாங்கி விடுவார்கள். இதில் நடிகர் கவுண்டமணி வீட்டில் மட்டும் 10க்கும் மேற்பட்ட கார்கள் இருப்பதாக சொல்வார்கள். ரஜினி கமல் விஜய் அஜீத் தனுஷ் சூர்யா கார்த்தி என பலரும் கார் பிரியர்களாக தான் இருக்கின்றனர்.

அதில் நடிகர் அஜீத்குமார் இன்னும் ஒரு படி மேலே போய் கார் ரேஸராக இருந்து வருகிறார். தொடர்ந்து கார் பந்தயங்களில் கலந்துக்கொண்டு இருக்கிறார். சினிமாவில் நடிப்பதை விட கார் ரேஸில் கலந்துக்கொண்டு ஜெயிப்பதில்தான் அவர் அதிக ஆர்வம் காட்டுகிறார். நடிகர் அஜீத்குமாரை போலவே கார் ஓட்டுவதில் பயங்கர கில்லாடியாக இருந்தவர்தான் காமெடி நடிகர் செந்தில்.

- Advertisement -

ஷூட்டிங் ஸ்பாட்டில் சீட்டாட்டம் நடந்தால் அதில் நடிகர் செந்தில்தான் ஜெயிப்பார். அவருடன் சீட்டாடி யாருமே ஜெயிக்க முடியாது என்று சொல்வார்கள். அதே போல் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் அஜீத்குமாரை போலவே வேகமாக கார் ஓட்டும் நடிகராகவும் செந்தில் இருந்திருக்கிறார். இதை அவரே வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் செந்தில் கூறியதாவது, குற்றாலம் பக்கத்துல செங்கோட்டையில் ஒரு படத்தோட ஷூட்டிங் நடந்தது. நான் அப்போ பத்மினி பியட் கார் வெச்சிருந்தேன். அப்போ ரயிலுக்கு முன்னாடி நான் வேகமா போயிட்டேன். நான் கார் பயங்கர வேகமா ஓட்டுவேன். கார்ல என் பக்கத்துல உட்கார்ந்துக்கிற அசிஸ்டென்ட், என்னை எறக்கி விட்ரு, என்னை எறக்கி விட்ரு, நான் போயிடுறேன் என்று பதறிடுவார்.

- Advertisement -

அப்புறம் ஒரு விபத்து நடந்துடுச்சு. அதிலே இருந்து நான் காரை தொடறது இல்லே. அப்புறம் 30 வருஷமா நான் காரே ஓட்டுறது இல்லே. ஒரு காலத்தில் நான் கார் ரேஸர் ஆக இருந்தவன்தான். ஒருநாள் அதிகாலை 3 மணிக்கு வீட்டுக்கு கிளம்பிட்டேன். அங்கே சுற்றியும் வயக்காடு. தூக்க கலக்கத்துல வயக்காட்டுக்குள்ள காரை விட்டுட்டேன். கார் டம்மு டும்முன்னு வயக்காட்டுக்குல ஓடுது. கடைசியில் வேப்பமரத்துல மோதிதான் கார் நின்னுது.

அப்புறம் கடப்பாரை எல்லாம் போட்டு நெம்பி வெளியே எடுத்து, மறுபடியும் காரை எப்படியோ ஓட்டீட்டு சென்னைக்கு வந்துட்டேன். காரை ரிப்பேர் பார்க்க செட்டுல விட்டுட்டு வீட்டுக்கு போனேன். என்னோட கார் டிரைவருக்கு அன்னிக்கு கல்யாணம். அதற்காக அவர் போயிட்டார். அதனால்தான் அன்று நான் காரை ஓட்டினேன். இல்லை என்றால் அந்த விபத்தே நடந்திருக்காது என்று நடிகர் செந்தில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்