நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர். குறிப்பாக 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். சந்திரமுகி தெனாலி தூள் திருமலை குஷி பிரியமான தோழி மன்மதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.
குறிப்பாக சூர்யாவுடன் காக்க காக்க பேரழகன் சில்லுன்னு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்த போது அவருடன் காதல் ஏற்பட்டது. பிறகு பெற்றோர்கள் சம்மதத்துடன் சூர்யா ஜோதிகா திருமணம் நடந்தது. ஒரு மகன் ஒரு மகள் இந்த தம்பதிக்கு உள்ளனர். சூர்யா குடும்பம் மும்பையில் இப்போது வசிக்கின்றனர்.
திருமணத்துக்கு பிறகு சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த ஜோதிகா மீண்டும் 36 வயதினிலே படத்தில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து ராட்சசி நாச்சியார் மகளிர் மட்டும் காற்றின் மொழி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் மம்முட்டியுடன் காதல் தி கோர் என்ற படத்திலும் அற்புதமாக நடித்திருந்தார்.
தமிழில் ஜோதிகா பல படங்களில் சிறப்பாக நடித்திருந்தாலும் பி வாசு இயக்கத்தில் ரஜினி நயன்தாரா பிரபு ஜோதிகா நாசர் வடிவேலு உள்ளிட்டோர் நடித்த சந்திரமுகி படம், சினிமா பயணத்தில் பெரிய திருப்புமுனை படமாக இருந்தது. ஜோதிகா என்றவுடன் சந்திரமுகி என நினைவுக்கு வரும் அளவுக்கு அந்த படத்தில், ஜோதிகா தான் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். ரஜினி நாயகனாக இருந்தும் படத்தில் ரசிகர்களின் அதிக கவனத்தை, வரவேற்பை பெற்றவர் ஜோதிகா தான்.
இதுகுறித்து ஒரு நேர்காணலில் நடிகை ஜோதிகா கூறியதாவது, நான் எல்லா ஹீரோக்களும் சவால் விடுகிறேன். அஜீத் விஜய் சூர்யா விக்ரம் மாதவன் கார்த்தி இப்படி எல்லா ஹீரோக்களும் இந்த சவாலை விடுகிறேன். ரஜினி சார் மாதிரி ஒரு கதாநாயகியை மையப்படுத்திய ஒரு படத்தில் அவர்கள் ஹீரோவாக நடிக்க வேண்டும்.
சந்திரமுகி மாதிரியான ஒரு படத்தில் நாயகிக்கு டைட்டிலை கொடுத்துவிட்டு அவர்கள் நடித்து காட்ட வேண்டும். அப்போதுதான் அவர்களது உறுதி தன்னம்பிக்கை இமேஜ் என்ன என்பது தெரிய வரும். அதை அவர்கள் ப்ரூப் பண்ண வேண்டும். இதை ஒரு சவாலாகவே அவர்களுக்கு வைக்கிறேன் என நடிகை ஜோதிகா கூறியிருக்கிறார்.





