- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் களத்துக்கு வந்த அமர்க்களம் பட இயக்குனர் சரண், அவர் வசனம் எழுதும் படத்தின் பெயர்...

மீண்டும் களத்துக்கு வந்த அமர்க்களம் பட இயக்குனர் சரண், அவர் வசனம் எழுதும் படத்தின் பெயர் இதுவா? அட டைட்டிலே வித்யாசமா இருக்குதே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனர் கே பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணி செய்தவர் சரண். இவரது இயற்பெயர் கேவி சரவணன். இவர் திரைப்பட தயாரிப்பாளராகவும் உள்ளார். ஜெமினி புரொடக்சன்ஸ் என்ற பெயரில் பல படங்களை அவர் சொந்தமாக தயாரித்தும் இருக்கிறார்.

இயக்குனர் சரண் இயக்கத்தில் ஜெமினி அசல் வசூல்ராஜா எம்பிபிஎஸ் அட்டகாசம் அமர்க்களம் காதல் மன்னன் ஜே ஜே வட்டாரம் பார்த்தேன் ரசித்தேன் இதயத்திருடன் உள்ளிட்ட பல படங்கள் அவர் இயக்கி இருக்கிறார். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக இயக்குனர் சரண் சினிமா ஃபீல்டில் காணப்படவில்லை.

- Advertisement -

இந்நிலையில் அவர் மீண்டும் தமிழ் சினிமாவில் நீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார். இயக்குனர் காமராஜ் மனோன்மணி இயக்கத்தில் ஒரு புதிய படம் உருவாகி உள்ளது. இந்த படத்துக்கு கதை வசனம் எழுதி இருப்பவர் இயக்குனர் சரண் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் முழுக்க முழுக்க மலேசியாவில் உருவாகி உள்ளது.

மலேசியாவில் தான் இந்த படத்தின் பெரும்பாலான படக் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. பல மாதங்களாக ஷூட்டில் மலேசியா பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில் வருகிற 26ம் தேதி இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா மலேசியாவில் நடக்கிறது. இந்த விழாவில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தின் ஆடியோவை ரிலீஸ் செய்கிறார்.

- Advertisement -

அதேபோல் இந்த படத்தின் டிரெய்லரை இயக்குனர் வெங்கட் பிரபு ரிலீஸ் செய்கிறார். இந்த படத்துக்கு சொடக்கு என்ற பெயர் டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளது. அதாவது சொடக்கு போடும் நேரத்தில் நடக்கும் சம்பவங்கள் தான் இந்த படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளது. அதனால் இந்த படம் விறுவிறுப்பான ஒரு திரைக்கதையில் உருவாகி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் அஜீத்குமார் நடித்த அட்டகாசம் அமர்க்களம் காதல் மன்னன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் சரண் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சரண் இயக்கத்தில் அஜீத்குமார் நடித்த அசல் படம் மட்டும் பெரிய வெற்றியை பெறவில்லை. அதே நேரத்தில் கமல் நடித்த வசூல் ராஜா எம்பிபிஎஸ் படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வசூலை வாரி குவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்