கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், 2021ம் ஆண்டில் வெளிவந்த படம் மூக்குத்தி அம்மன். இந்த படத்தில் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடித்திருந்தார். ஆர்ஜே பாலாஜி, எஸ்ஜே சரவணன் இணைந்து டைரக்ட் செய்த இந்த படத்தில், கதாநாயகனாக ஆர்ஜே பாலாஜி நடிந்திருந்தார். ஊர்வசி, மௌலி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த படம் வெற்றிப் படமாக அமைந்தது. இப்போது இந்த படத்தின் 2ம் பாகத்தை மாசாணி அம்மன் என்ற பெயரில், ஆர்ஜே பாலாஜி இயக்கி தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இந்த 2ம் பாகம் மாசாணி அம்மன் படத்தில் மூக்குத்தி அம்மனாக திரிஷாவை நடிக்க வைக்க கமிட் செய்துள்ளார். அவரும் ஓகே சொல்லிவிட்டார்.
ஆனால் மூக்குத்தி அம்மன் படத்தை தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் நயன்தாராவை நாயகியாக வைத்து மூக்குத்தி அம்மன் 2 படத்தை தயாரிப்பதாக அறிவிப்பு வெளியிட்டது. இதை நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளது.
இதற்கிடையே நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2ம் பாகம் இயக்குனர் என யார் என அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், இயக்குனர் சுந்தர் சியிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர் இப்போது தென்காசியில் வேறொரு புதிய படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். அதில் நடிகர் வடிவேலு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
இந்த படத்துக்கு பிறகு கலகலப்பு 3 படத்தையும் இயக்கும் திட்டத்தில் சுந்தர் சி இருப்பதால், மூக்குத்தி அம்மன் 2 படத்தை அவர் இயக்க ஒத்துக்கொள்வாரா, மாட்டாரா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது. எனினும் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம், ஐசரி கணேஷ் சம்பளத்தை அள்ளி தருபவர் என்பதால் சுந்தர் சி இதில் சம்மதிக்கவே அதிக வாய்ப்புள்ளது.
மேலும் ஏற்கனவே அரண்மனை 4 தந்த பெரிய வெற்றியால், அரண்மனை 5 படத்தை இயக்க சுந்தர் சி திட்டமிட்டுள்ளார். மூக்குத்தி அம்மன் 2 பக்தி படம்தான். அதில் அரண்மனை 5 பேய் கதையை இடையில் செருகி, கெட்டதை அழிக்கும் மூக்குத்தி அம்மனாக 2ம் பாகத்தை அவர் இயக்கவும், அதற்கேற்ப திரைக்கதை உருவாக்கவும் சுந்தர் சி தயங்க மாட்டார். அந்த வகையில் ஒரே கல்லில் சுந்தர் சி 2 மாங்காய் அடித்து விடுவார். அரண்மனை 5 படத்தை, மூக்குத்தி அம்மன் 2 ஆக மாற்றி தந்துவிடுவார் என்று சினிமா விமர்சகர்கள் கூறியுள்ளனர்.





