- Advertisement -
Homeபொழுதுபோக்குதென்னிந்திய சினிமாவை கடுமையாக விமர்சித்த நடிகை ஜோதிகா - மனைவியின் கருத்துக்கு நடிகர் சூர்யா மௌனம்...

தென்னிந்திய சினிமாவை கடுமையாக விமர்சித்த நடிகை ஜோதிகா – மனைவியின் கருத்துக்கு நடிகர் சூர்யா மௌனம் காப்பது சரிதானா?

- Advertisement -

சண்டையும் சச்சரவும் புலவர்களின் பரம்பரை சொத்து, அதை தவிர்க்க முடியாது என்று திருவிளையாடல் படத்தில் ஒரு காட்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வசனம் பேசியிருப்பார். அதே போல் சில நடிகர்கள் நடிகைகள் மீதான விமர்சனங்களும் சர்ச்சைகளும் எப்போதுமே தவிர்க்க முடியாததாகவே இருந்து வருகிறது.

குறிப்பாக தமிழ் சினிமாவில் நடிகர்கள் கமல்ஹாசன் சூர்யா விஜய் தனுஷ் விஜய் சேதுபதி போன்றவர்கள் அடிக்கடி விமர்சனங்களில் சர்ச்சைகளில் சிக்கி விடுகின்றனர். அதே போல் நடிகைகளில் நயன்தாரா திரிஷா ஜோதிகா குஷ்பு போன்றவர்களும் அடிக்கடி விமர்சனங்களில் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாகி விட்டது.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ஜோதிகா, தென்னிந்திய சினிமா ஆணாதிக்கம் நிறைந்தது. இங்கு ஹீரோக்களின் புகழ் பாடவும் அவர்களை பெருமையாக பேசவும் பாடல்களுக்கு நடனமாடவும் மட்டுமே கதாநாயகிகளை பயன்படுத்தி கொள்கின்றனர் என்று கடுமையான ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

கடந்த வாரத்தில்தான் ஒரு இந்தி வெப் சீரிஸில் நடித்திருந்த நடிகை ஜோதிகா ஒரு காட்சியில் சிகரட் புகைப்பது போன்று நடித்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி, இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக கூட்டுக்குடும்பமாக இருந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் சூர்யா மற்றும் தன் பிள்ளைகளுடன் ஜோதிகா மும்பையில் குடியேறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

திருமணத்துக்கு முன், திருமணத்துக்கு பின் என ஜோதிகா நடித்த படங்களில் பெரும்பாலும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில்தான் அவர் அதிகமாக நடித்திருக்கிறார். ஹீரோவுக்கு இணையாக அவரது கேரக்டர் இருந்துள்ளது. அதிலும் குஷி ரிதம் பூவெல்லாம் உன் வாசம் பேரழகன் சில்லுன்னு ஒரு காதல் சந்திரமுகி வேட்டையாடு விளையாடு என பல படங்கள் ஜோதிகா பெயர் சொல்லும் படங்களாக இருந்தன.

மேலும் பிரியமான தோழி மகளிர் மட்டும் மொழி 36 வயதினிலே நாச்சியார் காற்றின் மொழி என பல படங்கள் ஜோதிகாவை மையப்படுத்திய படங்களாகவே இருந்தன. இப்படி தமிழ் சினிமாவில் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்களில் நடித்துவிட்டு, தென்னிந்திய சினிமாவை மட்டம் தட்டி பேசிய ஜோதிகாவை கண்டிக்காமல், நடிகர் சூர்யா மௌனம் காப்பது சரிதானா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்